‘டீம் மீட்டிங்க்ல இதைப் பத்தி பேசுனோம்’!.. பரபரக்க வைத்த இந்திய வீரர்கள் ட்வீட்.. செய்தியாளர்கள் சந்திப்பில் ‘கோலி’ சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விவசாயிகள் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம் கொடுத்துள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை ஆதரித்து அமெரிக்க பாப் பாடகி ரிஹான்னா, சுற்றுச்சூழல் செயற்பட்டாளர் கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் சச்சின், கும்ப்ளே மற்றும் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் ‘#IndiaTogether, #IndiaAgainstPropaganda’ என்ற ஹேஷ்டேக்குகளைப் பகிர்ந்து, விவசாயப் போராட்டத்தை ஆதரித்த வெளிநாட்டு பிரபலங்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து நேற்று ட்விட்டரில் கருத்து தெரிவித்த கோலி, ‘கருத்து வேறுபாடுகள் இருக்கும் இந்த நேரத்தில் நாம் ஒன்றாக இருப்போம். விவசாயிகள் நம் நாட்டுடன் ஒருங்கிணைந்தவர்கள். இதில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அமைதி மற்றும் ஒன்றிணைந்து முன்னேறுவதற்கான சுமுக தீர்வை கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன்’ என பதிவிட்டிருந்தார்.

இந்தநிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. அதற்கு முன்னதாக வீடியோ கான்ஃபரிசிங் முறையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி கலந்து கொண்டு பேசினார். அப்போது விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து பேசிய அவர் ‘நாட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் அதைப் பற்றி நாங்கள் பேசுக்கொள்வோம். ஒவ்வொருவரும் அதுகுறித்து கருத்து தெரிவிப்பார்கள். டீம் மீட்டிங் போது விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பேசினோம். அவரவர் தங்களது கருத்துக்களை சொன்னார்கள். அவ்வளவு தான்’ என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்