'ரசிகரின்' கேள்விக்கு 'கோலி'யின் பதிலால் வெடித்த 'சர்ச்சை'.. குழம்பி நின்ற 'நெட்டிசன்கள்'.. தனது பாணியிலேயே பதில் சொன்ன 'கோலி'.. வைரலாகும் 'ட்வீட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், வரும் ஜுன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில், இந்திய அணி இங்கிலாந்து செல்லவுள்ளது. இதற்காக, கடந்த இரண்டு வாரங்கள், இந்திய வீரர்கள் பயோ பபுள் விதிகளுக்கு உட்பட்டு, இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அந்த சமயத்தில், இந்திய கேப்டன் விராட் கோலி (Virat Kohli), தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரசிகர்களுடன் உரையாடல் ஒன்றை நடத்தினார். அப்போது, பலர் இந்திய அணி குறித்தும், கோலியின் குடும்பத்தினர் மற்றும் பல விஷயங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பியிருந்தனர். இந்நிலையில், ரசிகர் ஒருவர் கோலியிடம், 'உங்களது உணவுமுறை என்ன?' என்ற கேள்வியை முன் வைத்தார்.

இதற்கு பதிலளித்த கோலி, 'நிறைய காய்கறிகள், முட்டைகள், காஃபி, பருப்பு, நிறைய கீரை, சில நேரங்களில் தோசை கூட. ஆனால் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில்' என கோலி பதில் தெரிவித்திருந்தார். கோலியின் இந்த பதில், ஆன்லைன் வட்டாரத்தில் மிகப்பெரும் விவாதம் ஒன்றைக் கிளப்பியது.

தனது உணவு லிஸ்ட்டில், முட்டையை கோலி சேர்த்ததைக் குறிப்பிட்டு பேசிய நெட்டிசன்கள், சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தடவை பேசிய போது, தான் சைவ உணவை பின்பற்றுபவன் (Vegan) என கோலி தெரிவித்ததாக குறிப்பிட்டனர். அதே போல, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனுடனான ஒரு உரையாடலின் போது, சைவ உணவு உண்ணுவது என்பது, தனது வாழ்க்கையில் எடுத்த சிறந்த முடிவுகளில் ஒன்றாகும் எனவும் கோலி கூறியிருந்ததாக நெட்டிசன்கள் தற்போது தெரிவித்து வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல், கோலியின் இந்த பதில், அதிக விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், தன் மீதான விமர்சனத்திற்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் கோலி விளக்கமளித்துள்ளார். 'நான் ஒரு போதும் என்னை 'Vegan' என அடையாளப்படுத்தியதில்லை. என்னை எப்போதும் 'vegetarian' என்றே குறிப்பிட்டுள்ளேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால், காய்கறிகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்' என தன்னை விமர்சித்தவர்களுக்கு கோலி பதிலடி கொடுத்துள்ளார்.

 

கோலியின் இந்த பதிலும், சற்று குழப்பத்தை ஏற்படுத்தினாலும், 'Vegan' என்பதற்கும், 'Vegeterian' என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது என்றும், இதனைத் தான் கோலி குறிப்பிட்டு, தன்னை 'vegan' என விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார் என்றும், சிலர் அவருக்கு ஆதரவாக தெரிவித்து வருகின்றனர். கோலியின் இந்த பதிவும், நெட்டிசன்கள் மத்தியில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்