'ஒத்த பவுலர வச்சு... எங்க மொத்த பேரைக்கும் ஸ்கெட்ச்-ஆ'?.. 'funny guys!'.. கோலியின் மாஸ்டர் ப்ளான்!.. ஆஸ்திரேலியா செம்ம ஷாக்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் போட்டி உள்ளிட்ட 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் வரும் 17ம் தேதி முதல் அடிலெய்டில் துவங்கவுள்ளது.

இதற்கென இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களை சிறப்பான வகையில் தயார்படுத்தி வருகின்றன.

கடந்த 2018-19ல் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றதை தொடர இந்தியா தீவிரமாக உள்ளது.  

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பகலிரவு போட்டி உள்ளிட்ட 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் வரும் 17ம் தேதி அடிலெய்டில் துவங்கவுள்ளது. முதலில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இதையொட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் சிறப்பான வகையில் தங்களை தயார்படுத்தி வருகின்றன. 

முன்னதாக நடைபெற்று முடிந்துள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை முறையே ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், தற்போது நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பகலிரவு போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு விராட் கோலி நாடு திரும்பவுள்ளார். 

வெளிநாட்டில் நடைபெறும் இந்த பகலிரவு போட்டியில் முதல்முறையாக இந்தியா பங்கேற்கவுள்ளது. இதையடுத்து, இதற்கென பிரத்யேகமான திட்டங்களை கேப்டன் விராட் கோலி வகுத்து அதை பயிற்சிகளில் செயல்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ளும்வகையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஆஸ்திரேலிய பௌலர் நாதன் லியோனின் பந்தை எதிர்கொள்ளும்வகையில் வாஷிங்டன் சுந்தரின் பௌலிங்கை கொண்டு, விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் பயிற்சி மேற்கொண்டனர்.

பயிற்சியாளர் ஸ்ரீதரின் வழிகாட்டுதலில் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் சுந்தருக்கு தமிழில் கட்டளைகளை பிறப்பித்து பௌலிங் செய்ய வைத்தார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்