'ஒரு ஸ்டெப் முன்னாடி வர்றதுக்கு'.. 'கெடச்ச சான்ஸ் அது'.. மிரட்டிய கோலி.. மீண்டும் 'சாதனை'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டித் தொடரை இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றியது. அதன் பின்னரான ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம், மழை காரணமாக முடிவை எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், கோலி தனது 42வது சதத்தை ஆடி, அதிரடியான சாதனையை நிகழ்த்தினார். டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  முன்னதாக ஆடிய தவான், முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க, கோலி களமிறங்கினார். அடுத்தடுத்து ரோஹித், பந்த் என கோலியுடன் நின்று ஆடத் தவறிய வீரர்களுக்குப் பிறகு ஸ்ரேயஸ் அய்யர் களமிறங்கினார். எனினும் அதற்குள் கோலி, தனது அரைசதத்தை எட்டினார். கோலியுடனான நிதானமான பார்ட்னர்ஷிப் ஒன்றை ஸ்ரேயஸ் அய்யர் கட்டமைத்தார். அதன் பின் கோலி, தனது விறுவிறு ஆட்டத்தால் சதம் அடித்ததோடு, எக்ஸ்ட்ரா 20 ரன்கள் எடுத்து, 120 ஆக தனது ஸ்கோரை நிறுத்தினார்.

ஸ்ரேயஸ் அய்யரும் 71 ரன்களில் ஆட்டமிழக்க, 50 ஓவர் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 279 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 280 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ். இந்திய வீரர்களின் கவனமான பந்துவீச்சினாலும், ஃபீல்டிங்கினாலும், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 42 ஓவர்களுக்கு 210 ரன்கள் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ்.இதனையடுத்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளைச் சேர்த்து சர்வதேச அரங்குகளில் தனது 67வது சதத்தை அடித்ததற்காக, கோலி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி, இதுபற்றி பேசும்போது, ஒருநாள் போட்டியில் இது கோலியின் இன்னொரு மாஸ்டக் க்ளாஸ் இன்னிங்ஸ் என புகழ்ந்துள்ளார்.

மேலும் இப்படி ஒரு அடி முன்வருவதற்கும், பொறுப்பாக ஆடுவதற்குமான வாய்ப்பாக இந்த போட்டி அமைந்ததாகவும் கோலி கூறியுள்ளார்.

VIRATKOHLI, INDVWI, ODI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்