பந்தை பிடிச்சிட்டு இப்படி பண்ணிட்டீங்களே மயங்க்.. கிரவுண்ட்டில் ‘செம’ கடுப்பான கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளது. அதனால் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்களும், புஜாரா 43 ரன்களும் எடுத்தனர். இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த சூழலில் இந்திய அணியின் மயங்க் அகர்வால் செய்த தவறால் விராட்கோலி கோபமடைந்தார். இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கீகன் பீட்டர்சன் நீண்ட நேரமாக காலத்திலிருந்து இந்திய அணிக்கு சோதனை கொடுத்து வந்தார். அதனால் அவரது விக்கெட்டை எடுக்க இந்திய பந்துவீச்சாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

அப்போது பும்ரா வீசிய ஓவரில் கீகன் பீட்டர்சன் பந்தை பவுண்டரிக்கு விளாசினார். அப்போது பவுண்டரி லைனுக்கு அருகே நின்றுகொண்டிருந்த மயங்க் அகர்வால் பந்தை தடுத்தபோது, பவுண்டரி லைனில் அவரது கால் பட்டு விட்டது. அதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 4 ரன்கள் சென்றது. இதனால் கேப்டன் விராட் கோலி, மயங்க் அகர்வால் மீது கடும் அதிருப்தி அடைந்தார். இப்போட்டியில் கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் அடித்த பும்ராவின் ஓவரில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIRATKOHLI, INDVSA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்