நடுமைதானத்தில் கண்டித்த கோலி - மிரண்ட கேமரா! #ViralVideo

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான தொடரில் இந்தியா நினைத்தது போல அனைத்தும் நடந்திருக்கலாம். ஆனால், யாருமே எதிர்பாராத விஷயம் ஒன்று நடந்தது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்த காரியம் தான் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. அது குறித்தான காணொலியும் படு வைரலாக மாறி வருகிறது.

Advertising
>
Advertising

மும்பையின் வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்தது. நான்காவது நாளான நேற்றே நியூசிலாந்தின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி போட்டியை வென்று தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது இந்தியா. இந்த தொடர் வெற்றியின் மூலம் வலுவான நியூசிலாந்து அணியை மட்டும் வீழ்த்தவில்லை இந்தியா. ஐசிசி-யின் ஆண்களுக்கான டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது இந்தியா. நெடு நாளுக்குப் பின்னர் இந்த சாதனையைப் படைத்துள்ளது இந்திய அணி.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி, சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்த டி20 உலக கோப்பைத் தொடருடன் பொறுப்பில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்வானுமான ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளருக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர் பொறுப்பு வகிக்கும் முதல் தொடரிலேயே இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் நடுவில், ஸ்பைடர் கேம் என்று சொல்லப்படும் ஆகாய கேமரா ஒன்று வான்கடே மைதானத்தின் நடுவில் இயங்காமல் அப்படியே நின்றுவிட்டது. வெகு நேரம் நடுவர்களும் வீரர்களும் காத்திருந்த பின்னரும் ஸ்பைடர் கேம், ஒரே இடத்தில் நங்கூரம் அடித்தது போல நின்றுவிட்டது.

இதைப் பார்த்த இந்திய வீரர்கள், அந்த கேமரா முன்னர் வந்து விளையாட்டுக் காட்டத் தொடங்கினர். சிலர் கேலி செய்யத் தொடங்கினர்.

இதுவெல்லாம் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. கேப்டன் விராட் கோலி, விறுவிறுவென வந்து, ‘இப்படிலாம் சேட்டை பண்ணக் கூடாது. ஒழுங்கா, நல்ல புள்ளையா மேல போய் வேலையப் பாக்கணும்’ என்கிற தொனியில் அட்வைஸ் கொடுத்துள்ளார். இது குறித்த வீடியோ தான் தற்போது வைரலாக மாறி வருகிறது. இது சம்பந்தமான போட்டோ ஒன்றும் மீம் கன்டென்டாக மாறி வருகிறது.

CRICKET, VIRATKOHLI, INDVSNZ, TEAM INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்