"இதுக்கு தான் 1000 நாளா Waiting".. கோலியின் 71 ஆவது சதம்.. கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆசிய கோப்பை தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பேட்டால் அடிக்க ஓங்கிய பாகிஸ்தான் வீரர்... களத்தில் சண்டை போட்ட வீரர்கள்.. உச்சகட்ட சர்ச்சை!!

கடந்த 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பையை இந்திய அணி தான் கைப்பற்றி இருந்தது.

அப்படி ஒரு சூழ்நிலையில், இறுதி போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறிய இந்திய அணி, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

முன்னதாக, லீக் தொடர்களில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளை வீழ்த்தி சூப்பர் ஃபோர்ஸ் சுற்றுக்கும் இந்திய அணி முன்னேற்றம் கண்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக சூப்பர் ஃபோர்ஸ் சுற்று போட்டியில் அடுத்தடுத்து தோல்விகளை தழுவியதால், இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்திய அணி இழந்தது.

அப்படி ஒரு சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தற்போது இந்திய அணி மோதி வருகிறது. ரோஹித் ஷர்மாவிற்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்ததால், கே எல் ராகுல் இந்திய அணியை தலைமை தாங்கி இருந்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தது.

அதன் படி ஆடிய இந்திய அணி, ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது. 20 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி, சுமார் 1000 நாட்கள் கழித்து, 84 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் சதம் ஒன்றை அடித்துள்ளார். ஆசிய கோப்பைக்கு முன்பாகவே கோலி பேட்டிங் மீது கடும் விமர்சனம் எழுந்து வந்தது. ஆனால், ஆசிய கோப்பையில் தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோலி, தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 122 ரன்கள் எடுத்து தான் 'King' என்பதை நிரூபித்துள்ளார்.

ஆசிய கோப்பையின் கடைசி போட்டியை சதத்துடன் முடித்துள்ளதால், அவரது ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், பல கிரிக்கெட் பிரபலங்கள் கூட கோலிக்கு தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனால், தனது பேட்டிங் மீதிருந்த விமர்சனத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார் விராட் கோலி.

 

Also Read | டீ விற்கும் வாலிபரை கரம்பிடித்த மருத்துவர்.. "அவரு மேல் Love வந்த காரணம் தான் அல்டிமேட்!!"..

CRICKET, KOHLI, VIRAT KOHLI, CENTURY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்