‘நம்ப வச்சு ஏமாத்தாதீங்க’.. அஸ்வின் ஆதங்கம்.. இந்த மேட்ச்லயாவது விளையாடுறாரா? இல்லையா?.. எஸ்.ஜே சூர்யா மாதிரி பதில் சொல்லி கன்ஃப்யூஸ் பண்ணிய கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இடம்பெறுவது தொடர்பாக விராட் கோலி சூசகமாக பதிலளித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில், ஒன்றில் டிராவும், மற்றொன்றில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று வருகிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று (25.08.2021) லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ப்ளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அதில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தான் அணியில் இடம்பெற இருந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாகவும் அஸ்வின் கூறியிருந்தார்.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், ‘போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரத்துக்கு முன்பு, களத்தில் நல்ல வெயில் அடிப்பதால் என்னை விளையாட தயாராக இருக்க சொன்னார்கள். ஆனால் காலை உணவு வேளையின் போது திடீரென மழை பெய்ய தொடங்கியதும், நான் ப்ளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டேன். ஏன் இதுபோன்ற நடக்காத விஷயங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறீர்கள் என கேட்டேன்’ என அஸ்வின் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இப்போட்டியில் விளையாடுவாரா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கோலி, ‘இந்த மைதானம் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிக புற்கள் இருக்கும் என நினைத்தேன், ஆனால் இங்கு குறைவாகவே உள்ளது.

ப்ளேயிங் லெவனை பொறுத்தவரை எது வேண்டுமானாலும் சாத்தியமாகலாம். இப்போதைக்கு இதை மட்டும்தான் என்னால் சொல்லமுடியும். மூன்றாவது மற்றும் நான்காவது நாளில் மைதானத்தின் தன்மை எப்படி இருக்கும் என முன்கூட்டியே பார்க்க வேண்டியுள்ளது. அதை வைத்து ப்ளேயிங் லெவனை அறிவிப்போம்.

லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்ற வெற்றிக் கூட்டணியை மாற்ற விருப்பமில்லை. ஆனால் எது வேண்டுமானாலும் சாத்தியமாகலாம்’ என கோலி சூசகமாக கூறியுள்ளார். கோலியின் இந்த பதில், அன்பே ஆருயிரே படத்தில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறும் ‘இருக்கு ஆனா இல்லை’ என்பது போல் உள்ளதாக ரசிகர்கள் குறும்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்