VIDEO: இங்கிலாந்து வீரரை ‘கெட்ட வார்த்தை’-ல் திட்டிய கோலி.. அப்படியே ஸ்டம்ப் ‘மைக்’-ல் ரெக்கார்டு ஆகிருச்சு.. வைரல் சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரை விராட் கோலி கெட்ட வார்த்தையில் திட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: இங்கிலாந்து வீரரை ‘கெட்ட வார்த்தை’-ல் திட்டிய கோலி.. அப்படியே ஸ்டம்ப் ‘மைக்’-ல் ரெக்கார்டு ஆகிருச்சு.. வைரல் சம்பவம்..!

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களும், இங்கிலாந்து அணி 391 ரன்களும் எடுத்தன. இதனை அடுத்து இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

Kohli heated exchange with England bowler James Anderson

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 5 ரன்னிலும், ரோஹித் ஷர்மா 21 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து வந்த விராட் கோலியும் 20 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால் 55 ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.

Kohli heated exchange with England bowler James Anderson

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் ரஹானே கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. அப்போது மார்க் வுட் ஓவரில் புஜாரா (45 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ரஹானேவும் (61 ரன்கள்) மொயின் அலியின் ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய ஜடேஜா 3 ரன்னிலும், ரிஷப் பந்த் 22 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த முகமது ஷமி, பும்ரா கூட்டணி இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இதில் முகமது ஷமி 52 ரன்களும், பும்ரா 30 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இப்போட்டியில் நடுவே இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பவுலிங் செய்துவிட்டு பிட்சின் நடுவே ஓடி வந்தார். இதை கவனித்த விராட் கோலி, பிட்சை சேதம் செய்ததாக ஜேம்ஸ் ஆண்டர்சனை எச்சரித்தார். அப்போது அவர் கோலி பார்த்து ஏதோ திட்ட, பதிலுக்கு கோலி, ‘என்னையா திட்டுகிறீர்கள், இது ஒன்றும் உங்கள் வீட்டு கொல்லைப்புறம் இல்லை’ என கெட்ட வார்த்தையை பயன்படுத்தி திட்டினார்.

இது அப்படியே ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை முதல் பந்திலேயே ஜேம்ஸ் ஆண்டர்சன் அவுட்டாக்கியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்