‘முன்னாடியே’ சொல்லிட்டாரு.. 2 டெஸ்ட் மேட்ச் முடிஞ்சதும் இந்தியா திரும்பும் கோலி?.. பிசிசிஐ முக்கிய அதிகாரி சொன்ன தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி இரு போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

‘முன்னாடியே’ சொல்லிட்டாரு.. 2 டெஸ்ட் மேட்ச் முடிஞ்சதும் இந்தியா திரும்பும் கோலி?.. பிசிசிஐ முக்கிய அதிகாரி சொன்ன தகவல்..!

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரி முதல் வாரத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அந்த நேரத்தில் விராட் கோலி தனது மனைவியுடன் நேரத்தைச் செலவிடும் வகையில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Kohli could miss final 2 Australia Tests due to birth of first child

இதுகுறித்து பிசிசிஐ அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பிசிசிஐ அமைப்பைப் பொறுத்தவரை குடும்பத்துக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும். கேப்டன் விராட் கோலி , தனது மனைவி பிரசவத்துக்காக விடுப்பு எடுக்க முடிவு செய்திருப்பதால், அவர் கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார். வழக்கமான நாட்களாக இருந்தால், ஒரு போட்டியில் மட்டுமே கோலி விளையாடாமல் இருந்திருப்பார்.

Kohli could miss final 2 Australia Tests due to birth of first child

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக தனிமைப்படுத்தும் காலம் இருப்பதால், முதல் இரு டெஸ்ட் போட்டிகள் முடிந்தபின் விராட் கோலி இந்தியாவுக்குச் சென்றுவிடுவார். ஒரு டெஸ்ட் போட்டிக்கு மட்டும் ஆடாமல் கடைசி டெஸ்ட் போட்டிக்கு வருவதாக இருந்தால், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அது சாத்தியமில்லாதது என்பதால், கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாடமாட்டார்.

விராட் கோலிக்குப் பதிலாக கே.எல்.ராகுல் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படலாம். மயங்க் அகர்வால், பிரித்வி ஷா தொடக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்பு உள்ளது. ரோஹித் சர்மாவின் காயம் குணமைடைந்தால் டெஸ்ட் தொடரில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போது ரோஹித் சர்மா விளையாடி வருவது பிசிசிஐ அமைப்புக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. ரோஹித் சர்மாவின் உடல்நிலை குறித்து உடற்தகுதி நிபுணர்கள் நிதின் படேல், நிக் வெக் ஆகியோர் ஆய்வு செய்து அவர் தகுதியுடன் இருக்கிறார் என்று சான்று அளித்தால், நவம்பர் 11ம் தேதி புறப்படும் இந்திய அணியுடன் ரோஹித் சர்மாவும் செல்வார். அவரை அணியில் சேர்ப்பது குறித்துப் பின்னர் முடிவு செய்யப்படும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்