ODI ஓய்வை அறிவித்த ஸ்டோக்ஸ்.. கோலியின் மனம் உருக வைத்த கமெண்ட்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக ஜொலித்து வந்த பென் ஸ்டோக்ஸ், ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், கோலி போட்டுள்ள கமெண்ட் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர், சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடர்களில் ஆடவுள்ளது.

இதில், முதலாவதாக ஆரம்பமாக உள்ள ஒரு நாள் தொடரின் முதல் போட்டி, நாளை (19.07.2022) நடைபெற உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். நாளை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியுடன் ஒரு நாள் போட்டியில் இருந்து, பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற உள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் அவர் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இது சற்று கடினமான முடிவு தான் என்றும், இங்கிலாந்து அணிக்காக எனது சக வீரர்களுடன் ஆடிய ஒவ்வொரு நிமிடத்தையும் நான் நேசிக்கிறேன் என்றும் ஒரு அற்புதமான பயணமாக இது அமைந்துவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதே போல, "மூன்று வடிவங்களில் ஆட வேண்டும் என்பது என்னால் தற்போது இயலாத ஒன்று. சற்று பிசியான அட்டவணை இருப்பதால், என் உடல் அதற்கேற்ப தயாராகவும் இல்லை. இதனால் என்னிடமிருந்து எதிர்பார்க்கும் பயனளிப்பும் அணிக்குக் கிடைப்பதில்லை. மற்றொரு வீரரின் இடத்தில் நான் ஆடுவது போலவும் தோன்றுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக என்னால் முடிந்த அனைத்தையுமே நான் செய்வேன். தற்போது ஒரு நாள் தொடர் போட்டியில் இருந்து நான் ஓய்வு பெற்றுள்ளதால் இனி டி 20 போட்டிகளிலும் முழு மூச்சாக இறங்குவேன்" என பென் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு, இங்கிலாந்து அணி ஐம்பது ஓவர் உலக கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். அவரது திடீர் ஓய்வு அறிவிப்பு, ரசிகர்கள் பலரையும் வேதனை அடையச் செய்துள்ளது. பலரும் மனம் உடைந்து போய், வேதனையுடன் சில கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அதே போல, கிரிக்கெட் பிரபலங்கள் பலரும், ஸ்டோக்ஸ் முடிவு குறித்து, அவரது பதிவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, பென் ஸ்டோக்ஸின் இன்ஸ்டா பதிவில், கமெண்ட் ஒன்றை செய்துள்ளார்.

அதில், "நான் இதுவரை விளையாடியதில், மிகவும் போட்டி குணம் கொண்ட வீரர் நீங்கள் தான். Respect" என கோலி குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் போட்டியில் எதிரணியில் இருக்கும் போது, கோலி மற்றும் ஸ்டோக்ஸ் மாறி மாறி ஆக்ரோஷம் காட்டும் நிலையில், தற்போது இந்த கோலியின் கமெண்ட், அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

VIRATKOHLI, BEN STOKES, ODI, RETIREMENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்