'எடுத்த உடனே 'பெரிய ஷாட்ஸ்' இல்ல... பக்காவா ஸ்கெட்ச் போட்டு'... கோலியின் பேட்டிங் சீக்ரெட்டை உடைத்த முன்னாள் வீரர்!.. 'அவர பார்த்து கத்துக்கோங்க'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடினமான சூழலில் ஒரு கிரிக்கெட் வீரர் எப்படி விளையாட வேண்டும் என்பதை கோலியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் பேட்டிங் வீக்னஸ் பார்க்கப்பட்டது. ஏனெனில், துவக்க வீரர் ராகுல் எதுவும் எடுக்காமலும், ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பின்னராவது ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமையும் என்று எதிர்பார்த்த வேளையில் இஷான் கிஷன் 4 ரன்களிலும், பண்ட் 25 ரன்களில் வெளியேறினர்.

இப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணியால் பெரிய ரன்குவிப்பிற்கு செல்ல முடியவில்லை. ஆனால், ஒரே ஒரு ஆறுதலாக ஒருபுறம் சிறப்பாக விளையாடிய விராட் கோலி அனைவருனுடனும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை 20 ஓவர்களின் முடிவில் 156 ரன்களுக்கு உயர்த்தினார். 25 பந்துகள் வரை பொறுமையாக விளையாடி வந்த கோலி, அதன்பிறகு டாப் கியரில் விளையாடி 46 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதில் 4 சிக்சர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும். தனி ஒரு ஆளாக அந்த போட்டியில் விளையாடி இந்திய அணியின் ரன் குவிப்பை உயர்த்திய கோலிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதற்கிடையே, இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமணன் அவரது போராட்டத்தை வெகுவாக பாராட்டி இளம் வீரர்களுக்கு ஒரு அட்வைஸ்ஸும் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரு கட்டத்தில் இந்திய அணி 140 ரன்களையாவது எட்டுமா ? என்ற குழப்பம் இருந்தது. ஆனால் அதற்கு கோலி விடை கொடுத்தார். சேசிங் மாஸ்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார். மிகக் கடினமான சூழலில் இந்திய அணியின் ஸ்கோரை மீட்டு வந்தார்.

இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகள் அவ்வப்போது வரும். அதில் எப்படி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை கோலியின் இந்த இன்னிங்சை பார்த்து இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் லட்சுமணன் தெரிவித்தார்.

3 விக்கெட்டுகள் சரிந்த போது எப்படி களத்தில் நின்று விளையாட வேண்டும் என்றும், அடுத்து வரும் வீரர்களை வைத்து எவ்வாறு பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்றும், முதலில் பெரிய ஷாட்டுகள் ஆடாமல் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து, அதன்பிறகு எப்படி பெரிய ஷாட்களை ஆடி ஸ்ட்ரைக் ரேட்டை இருமடங்காக மாற்ற வேண்டும் என்பதை கோலி செய்து காட்டினார். அதை பார்த்ததில் மகிழ்ச்சி" என்று அவர் கோலியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்