VIDEO: 'மேட்ச்' முடிஞ்ச பிறகு கோலி, டிராவிட் செய்த காரியம்...! இந்த நல்ல 'மனசு' யாருக்கு வரும்...? - வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

Advertising
>
Advertising

இந்த போட்டித் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

டிசம்பர் 3-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு மாயன்க் அகர்வால் 150 ரன்களும், சுப்மன் கில் 44 ரன்களும் சேர்த்தனர்.

புஜாரா , கோலி ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆனார்கள். ஸ்ரேயஸ் ஐயர் (18 ரன்கள்), விர்திமான் சஹா (27 ரன்கள்) மற்றும் அக்‌ஷர் பட்டேல் 52 ரன்கள் அடித்ததன் மூலம் முதல் இன்னிங்ஸில் 325 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணியின் அஜாஸ் பட்டேல் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதற்கு பின்னர், முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணியில் டாம் லதாம் (10 ரன்கள்) மற்றும் ஜெமிசன் (17 ரன்கள்) ஆகிய இருவரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் வெளியேறினர். இதனால் 62 ரன்களுக்கே நியூசிலாந்து அணி ஆல் அவுட் ஆனது.

பின்னர், 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு புஜாராவும், மாயங்க் அகர்வாலும் களமிறங்கினர். பீல்டிங்கின் போது சுப்மன் கில்லிற்கு பலமாக அடிபட்டதால் புஜாரா தொடக்க வீரராக களமிறங்கினார்.

நியூசிலாந்து அணியின் பவுலிங்கை கேசுவலாக எதிர்கொண்ட மாயங்க் அகர்வால் – புஜாரா ஜோடி சிறப்பாக ஆடி வருவதன் மூலம் போட்டியின் 2-ஆம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 69 ரன்கள் அடித்த இந்திய அணி, மொத்தம் 332 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.

இந்நிலையில், நேற்றைய ஆட்டம் முடிந்தபிறகு இந்திய கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும், அஜாஸ் பட்டேலை தேடி சென்று வாழ்த்தியுள்ளனர். எதிர் அணி வீரராக இருந்த போதிலும் அவரது பவுலிங் திறனை மதித்து மனதார வாழ்த்திய கோலி மற்றும் டிராவிட்டை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

 

KOHLI, DRAVID

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்