'11 வயதில் 80 கிலோ'... 'கொழு கொழு குழந்தை Fit -ஆக மாற நடந்த மேஜிக் என்ன?... தங்கமகன் நீரஜ்’ன் முழு டயட் ரகசியம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தங்க மகன் நீரஜின் சாதனையை இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடி வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் நீரஜ் சோப்ரா வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார். அவர் ஈட்டி எறிதல் பிரிவில், தங்கப் பதக்கத்தை நீரஜ் சோப்ரா வென்றுள்ளார். இதன் மூலம் அவர் நாட்டின் 100 ஆண்டுக் கால காத்திருப்பை நிறைவு செய்துள்ளார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒலிம்பிக்கில் இந்திய மூவர்ணக் கொடி பறக்கவிடப்பட்டது.

மேலும் நீரஜ் தங்கப் பதக்கத்தைப் பெற்றவுடன், தேசிய கீதம் பாடப்பட்டது. நீரஜ் 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். ஆனால் நீரஜ் தனது குழந்தைப் பருவத்தில் 80 கிலோ எடையுடன் இருந்தார் என்பதை நம்ப முடிகிறதா?. ஆம், நம்பி தான் ஆக வேண்டும். 11 வயதில் 80 கிலோ எடைகொண்ட நீரஜ், இப்போது தனது 23வது வயதில், 86 கிலோ எடையுடன் பிட்னெஸ் பிரீக் ஆக மாறியுள்ளார்.

பிட்னஸில் மிகுந்த ஆர்வம் கொண்ட நீரஜ் சோப்ரா, தான் எதுமாதிரியான பயிற்சி மற்றும் உணவு முறையை பின்பற்றுகிறேன் என்பது குறித்துத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். நீரஜ் தனது உடல் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பதால், வெயிட் ட்ரைனிங்யில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.

குறிப்பாக ஸ்டாமினாவை அதிகரிக்க ஒட்டப்பயிற்சியில் ஈடுபடுகிறார். மேலும் அவர் வெயிட் லிப்ட்டிங் அல்லது பளுதூக்குதல் போன்ற பயிற்சிகளையும் மேற்கொள்கிறார். நீரஜ் செய்யும் டம்பெல் பயிற்சி, அவரது தோள் வலிமையை அதிகரிக்கிறது. ஈட்டி எறிதலில் தோள்பட்டை வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் நீரஜ் சோப்ராவின் உணவுப் பட்டியலைப் பொறுத்தவரை அதிகப்படியான கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து விட்டு ப்ரோட்டீன் அதிகமாக இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்கிறார்.

அதோடு பழ வகைகளை எப்போதும் தனது உணவுப் பட்டியலில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார். காலை உணவுக்கு, நீரஜ் தினசரி பிரௌன் ரொட்டி மற்றும் ஆம்லெட் எடுத்துக் கொள்கிறார். மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு, நீரஜ்  சால்மன் மீன் மற்றும் முட்டைகளை எடுத்துக் கொள்கிறார். நீரஜ் பசியுடன் இருக்கும்போது ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்க விரும்புகிறார்.

இதற்கிடையே போட்டியின்போது சாலட் மற்றும் பழங்களை மட்டுமே சாப்பிட விரும்புகிறார். இதனால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், மந்த உணர்வு இருப்பதில்லை. இதனால் நீராஜின் உடல் எப்போதும் ஆற்றலோடு இருக்க உதவுகிறது.

நீராஜின் விருப்ப உணவுப் பட்டியலில்  வெஜிடபிள் பிரியாணி மற்றும் ஆம்லெட்டிற்கு எனத் தனி இடம் எப்போதும் உண்டு. நீரஜின் தனது டயட்பட்டியலை  20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மாற்றிக்கொள்கிறார். இருப்பினும் தினசரி உணவில் இனிப்பு மற்றும் துரித உணவுகளை அறவே தவிர்த்து விடுகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்