'சூப்பர் ஓவரில்'... 'ஓப்பனிங் பேட்ஸ்மேனா'... 'நான் இறங்க இந்த வீரர் தான் காரணம்'... ‘சஞ்சு சாம்சன் வேண்டாம்னு சொன்னாரு’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியின் சூப்பர் ஓவரில் தொடக்க வீரராக கேப்டன் விராட் கோலி இறங்க யார் காரணம் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

வெலிங்டனில் இன்று நடைபெற்ற டி20 போட்டி, கடந்த போட்டியை போன்றே சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுல் மற்றும் கேப்டன் விராட் கோலி களமிறங்கினர். இது ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியது. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக விராட் கோலி ஏன் இறங்கினார் என தற்போது விராட் கோலியே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறுகையில், ‘சூப்பர் ஓவரில் முதலில் சஞ்சு சாம்சனையும், கே.எல். ராகுலையும் தான் அனுப்புவதாக இருந்தோம். ஆனால் ராகுல் தான், என்னிடம் நான் (கோலி) இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஏனெனில் என் அனுபவமும், நான் ஆடும் விதமும் வெற்றிக்கு உதவும் என்றார். இதனையடுத்தே நானும் ராகுலும் இறங்கினோம். ராகுலின் முதல் 2 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தது வெற்றிக்கு முக்கியமாக அமைந்தது’ என்றார்.

தொடர்ந்து சொதப்பி வந்தாலும் தற்போதைய போட்டியில், இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், இந்தப் போட்டியிலும் சொதப்பியதை அடுத்தே, அதிரடி ஆட்டம், விக்கெட் கீப்பிங் என கலக்கி வரும் கே.எல். ராகுல் தற்போது வீரர்கள் தேர்விலும் சரியான முடிவை எடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

VIRATKOHLI, KLRAHUL, ICC, BCCI, SANJU SAMSON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்