'லட்சக்கணக்கில் ஃபாலோயர்கள்’... ‘ரசிகர்களுக்கு நன்றி சொல்லி’... ‘கலக்கலாக ட்வீட் செய்த இந்திய வீரர்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான கே.எல். ராகுலை ட்விட்டர் பக்கத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான கே.எல், ராகுல் டெஸ்ட் போட்டியின் மூலம் அறிமுகமானார். பின்னர் தனது அதிரடி பேட்டிங் மூலம் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இவர் விளையாடி வருகிறார்.

டெஸ்ட் போட்டியில் சற்று சொதப்பியதால் அணியில் இருந்து கே.எல். ராகுல் நீக்கப்பட்டார். தற்போது ஆஸ்திரேலியா தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். இதில் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைத்து சிறப்பாக விளையாடினால் தொடர்ந்து இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

பொதுவாக கே.எல். ராகுல் ட்விட்டரில் பல சுவாரஸ்யமான தகவல்களை பரிமாறக்கூடியர். இதனால் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த எண்ணிக்கை தற்போது 50 லட்சத்தை தாண்டி 50,02,256 ஆக உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கேஎல் ராகுல் ட்விட்டர் பக்கத்தில் ‘உயர்வு மற்றும் தாழ்வு என எப்படி இருந்தாலும், உங்களுடைய ஆதரவு இந்தப் பயணத்தை சிறப்பாக்கியது. அனைவருக்கும் நன்றி, உங்களுடைய ஆதரவுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்