ஒரு நொடில பறந்து வந்து ஒத்த கையில கேட்ச் பிடிச்ச KL ராகுல்.. எங்கே இருந்துயா வந்தாரு?.. மிரண்டு போன ஆஸ்திரேலிய வீரர்! டிரெண்டிங் வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரிலும், 3 ஒரு நாள் போட்டி தொடரிலும் இந்திய அணியை எதிர்கொள்கிறது.

Advertising
>
Advertising

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | "ஷமியா இப்டி ஒரு பால் போட்டது?".. ஒரு நிமிஷம் குழம்பி நின்ன கோலி, புஜாரா... என்ன நடந்துச்சு?

அந்த வகையில் இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் விதர்பா மைதானத்தில் நடைபெற்றது. இதில்  இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி வீரர்களின் சுழற்பந்து வீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலாக இருந்தது.  இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று வெள்ளிக்கிழமை துவங்கி இருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் மிகவும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் ஐம்பது ரன்களை தொட்ட போது டேவிட் வார்னர் 15 ரன்களில் ஷமி பந்து வீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன் ஆட வந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

மார்னஸை அஸ்வின் ஆட்டமிழக்க செய்தார். அடுத்து ஆட வந்த ஸ்மித்தை அஸ்வின் டக் அவுட்டாக்கி பெவிலியன் நோக்கி அனுப்பினார். டிராவிஸ் ஹெட் 12 ரன்னில் ஷமி பந்து வீச்சில் ஆட்டமிழக்க அடுத்து வந்த பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், கவாஜாவுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார்.

நிதானமாக ஆடிய உஸ்மான் கவாஜா, அவ்வப்போது ஸ்வீப் & ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி இந்திய அணிக்கு தலைவலியை ஏற்படுத்தினார். போட்டியின் 46 வது ஓவரில் உஸ்மான் கவாஜா, ஜடேஜா வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார். பந்து காற்றில் பறக்க கவர் & பாயின்ட் திசையில் நின்ற ராகுல் கண் இமைக்கும் நேரத்தில் பந்தை ஒரு கையில் பிடித்து கவாஜாவை ஆட்டமிழக்க வைத்தார். இந்த விக்கெட் மூலம் ஜடேஜா தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Images are subject to © copyright to their respective owners.

இறுதியாக ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 13* & ராகுல் 4* ரன்களில் களத்தில் உள்ளனர்.

Also Read | மனசே குளிர்ந்து போச்சுப்பா.. 100-வது டெஸ்ட்டில் புஜாரா.. இந்திய அணி கொடுத்த கவுரவம்.. வீடியோ..!

CRICKET, KL RAHUL, RAVINDRA JADEJA, USMAN KHAWAJA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்