IPL 2022 : வேணும்னா பாருங்க.. 10 டீமும் அவர எடுக்க போட்டி போடும்.. செம டிமாண்டுங்க.. அடித்துச் சொல்லும் கே எல் ராகுல்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் மெகா ஏலத்தில், வீரர் ஒருவரை அணியில் எடுத்துக் கொள்ள கடும் போட்டி நிலவும் என கே எல் ராகுல் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் என இரண்டையும் இழந்துள்ள இந்திய அணி, அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக கிரிக்கெட் போட்டிகளில் ஆடவுள்ளது.

இந்திய அணியின் சர்வதேச போட்டிகள் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஐபிஎல் போட்டிகள் குறித்தும் அடுத்தடுத்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 15 ஆவது ஐபிஎல் தொடரில், புதிதாக அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் இணைந்துள்ளது.

புதிய ஐபிஎல் அணிகள்

இதன் காரணமாக, 10 அணிகள் ஐபிஎல் தொடரில் ஆடவுள்ளதால், அனைத்து அணிகளும் 2 முதல் 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். மீதமுள்ள வீரர்களை அணியில் இணைத்துக் கொள்ள, மெகா ஏலமும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடைபெறவுள்ளது. அதே போல, அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகளும், கடந்த சில தினங்களுக்கு முன்பு, மற்ற அணிகள் நீக்கிய வீரர்களின் பட்டியலில் இருந்து தலா 3 பேரைத் தேர்வு செய்துள்ளது.

கேப்டன் ஹர்திக் பாண்டியா

இதில், அகமதாபாத் அணி, ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில் மற்றும் ரஷீத் கான் ஆகிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படவுள்ளார். அதே போல, மற்றொரு அணியான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், கே எல் ராகுல், ஸ்டியோனிஸ், ரவி பிஷ்னோய் ஆகிய வீரர்களை லக்னோ அணி வாங்கியுள்ளது.

அவருக்கு தான் டிமாண்ட்

லக்னோ அணியின் கேப்டனாக செயல்படவுள்ள ராகுல், இதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் ஆடிய பஞ்சாப் அணிக்கும் தலைமை தாங்கியிருந்தார். இதனிடையே, ஐபிஎல் மெகா ஏலத்தில், ஒரு வீரருக்கு 10 அணிகளும் போட்டி போடப் போகிறது என ராகுல் சுட்டிக் காட்டியுள்ளார்.


'தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்கு வகித்துள்ளார். ரபாடாவைப் போல ஒரு வீரர் வேண்டும் என்று தான் அனைத்து அணிகளும் எதிர்பார்க்கும். 145 கி.மீ வேகத்தில் பந்து வீசும் ரபாடா, மிகவும் ஸ்மார்ட் ஆன கிரிக்கெட் வீரர் ஆவார்.

மிகப்பெரிய இடத்திற்கு வருவார்

அப்படி ஒரு வீரர் வேண்டுமென்று தான் அனைத்து அணிகளும் கருதும். இதனால், அவரை அணியில் சேர்க்க, நிச்சயம் பெரிய அளவில் போட்டிகள் ஏற்படும்.



தென்னாப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான மார்கோ ஜென்சன், எங்களுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி வெல்ல, முக்கிய காரணமாக இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கான கடந்த முறை அறிமுகமான ஜென்சன், சர்வதேச போட்டியில் மிகப் பெரிய இடத்திற்கு வருவார்.

தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன் வெண்டர் டுசன், சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடுகிறார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில், சுழற்பந்து வீச்சை சிறப்பாக கையாளும் வீரர் ஒருவர் அணியில் தேவை தான்' என ராகுல் தெரிவித்துள்ளார்.

கடும் போட்டி

முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் லக்னோ அணி, ஆரம்பத்திலேயே சிறப்பான வீரர்களைக் குறி வைப்பதால், நிச்சயம் கடுமையான போட்டியை ஐபிஎல் மெகா ஏலத்தில், இந்த அணி உருவாக்கும் என்று தான் தெரிகிறது.

KLRAHUL, KAGISO RABADA, MARCO JANSEN, LUCKNOW SUPER GIANTS, VAN DER DUSSEN, IPL 2022, ரபாடா, கே எல் ராகுல், ஐபிஎல் 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்