'கே.எல்.ராகுல் நல்லா விளையாடலனா... அப்படியே விட்ருவீங்களா!.. தயவு செஞ்சு 'இத' பண்ணுங்க'!.. இந்திய அணி பேட்டிங்க்கு இப்படி ஒரு சோதனையா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து சொதப்பிய கே.எல்.ராகுல் மீண்டு வர இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என கவுதம் கம்பீர் அட்வைஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3 - 2 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இப்போட்டியில் கே.எல்.ராகுலின் ஃபார்ம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்ற கே.எல்.ராகுல், அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம்பெற்றார். ஆனால், வாய்ப்பு வழங்கப்படவில்லை. பின்னர் சர்வதேச போட்டிகள் ஏதும் இடையில் ஆடாமல், கிரிக்கெட் பயிற்சி இல்லாமல் உள்ளூர் போட்டிகளில் ஏதும் பங்கேற்க முடியாமல், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் பங்கேற்றார். 

எந்தவித பயிற்சியும் இல்லாததால் கே.எல்.ராகுல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சொதப்பினார். எனினும், அவர் மீது நம்பிக்கை வைத்த அணி நிர்வாகம் அவருக்கு முதல் 4 போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கியது. அதில் 1, 0, 0, 14 என ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார். இதன் காரணமாக 5வது டி20 போட்டியில் அவரின் இடத்திற்கு நேரடியாக விராட் கோலி களமிறங்கினார். 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய கவுதம் கம்பீர், "5வது டி20 போட்டியில் 6 பவுலர்களுடன் செல்ல வேண்டும் என்பதால் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் உட்காரவைக்கப்பட்டார். கடைசி டி20 போட்டியில் இந்த தேவை இருந்ததால் இதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால், கே.எல்.ராகுல் இந்திய அணி மேலும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவேண்டும். ஒரு நாள் தொடரில் 3 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு தர வேண்டும். இதுவே அவர் மீண்டு வருவதற்கு இந்திய அணி செய்யும் நன்மையாகும்" எனத் தெரிவித்துள்ளார். 

ஒரு வீரர் சரியாக ஆடவில்லை எனக்கூறி அவரை பெஞ்சில் உட்கார வைத்தால் அது அவரை மீண்டும் ஃபார்முக்கு கொண்டு வராது. அவர் நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என எண்ணி மன உளைச்சல் அடைவார்.

எனவே, ஒரு ப்ளேயரை மீண்டும் பழைய ஃபார்முக்கு கொண்டு வரவேண்டும் என்றால் மீண்டும் மீண்டும் அவருக்கு விளையாட வாய்ப்பு தருவதே சிறந்த வழியாகும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்