பஞ்சாப் அணியில் இருந்து விலகியது ஏன்..? இதுதான் காரணமா? ஒருவழியாக மனம் திறந்த கே.எல்.ராகுல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து விலகியதற்கான காரணத்தை கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் மார்ச் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி உட்பட அனைத்து அணிகளும் கோப்பையை கைப்பற்ற தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை கூடுதலாக 2 அணிகள் சேர்ந்துள்ளதால் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் லக்னோ அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுலும், குஜராத் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுல், அந்த அணியால் தக்க வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பஞ்சாப் அணி அவரை விடுத்தது. இதனை அடுத்து கே.எல்.ராகுலை லக்னோ அணி வாங்கியது. மேலும் அவருக்கு கேப்டன் பதவியையும் கொடுத்து.

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து தற்போது கே.எல்.ராகுல் பேசியுள்ளார். அதில்,  ‘நான்கு ஆண்டுகள் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளேன். அந்த அணி வீரர்களுடன் நீண்ட காலம் பயணித்துள்ளேன். இதனால், அணி மாறுதல் தொடர்பான முடிவினை எடுப்பதற்கு எனக்கு கஷ்டமாக இருந்தது. ஆனாலும் புதிய அணியில் இணைந்து புது விதமான பயணத்தினை தொடர விரும்பினேன். அதனால் லக்னோ அணியில் இணைந்துள்ளேன்’ என கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.

முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் அணில் கும்ளே கே.எல்.ராகுலின் விலகல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில், ‘கே.எல்.ராகுலை தக்க வைக்க வேண்டும் என்றுதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவரை கேப்டனாக நியமித்தோம். ஆனால் அவர் ஏலத்தில் செல்ல விரும்பியதை நாங்கள் மதிக்கிறோம். இது ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட உரிமை’ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

KLRAHUL, IPL, PUNJABKINGS, LUCKNOWSUPERGIANTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்