இந்தியா இத்தனை வருசமா கட்டிக்காத்த சாதனை.. இப்படி கேப்டனான ‘முதல்’ போட்டியிலேயே பறக்க விட்டீங்களே ராகுல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை தக்கவைத்திருந்த சாதனையை கேப்டனான முதல் போட்டியிலேயே கே.எல்.ராகுல் தவறவிட்டுள்ளார்.

இந்தியா இத்தனை வருசமா கட்டிக்காத்த சாதனை.. இப்படி கேப்டனான ‘முதல்’ போட்டியிலேயே பறக்க விட்டீங்களே ராகுல்..!
Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது. செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து ஜோகன்னஸ்பர்க் மற்றும் கேப்டன் மைதானத்தில் நடந்த அடுத்தடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

KL Rahul missed Team India long time record

இந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தற்போது விளையாடி வருகின்றன. இதன் முதல் போட்டி நேற்று போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது.

KL Rahul missed Team India long time record

இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 265 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியைத் தழுவியது.

கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இப்போட்டியில் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். முதல் ஒரு நாள் போட்டி நடந்த போலண்ட் பார்க் மைதானத்தில் இந்தியா இதுவரை தோல்வியை தழுவியதில்லை. அதேபோல் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இந்த மைதானத்திலும் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இந்தியா தோற்றதில்லை.

இப்படி உள்ள சூழலில் இந்த மைதானங்களில் தான் கேப்டனாக முதல் போட்டியிலேயே கே.எல்.ராகுல் தோல்வியை தழுவியுள்ளார். இதனால் இந்தியா இத்தனை ஆண்டுகளாக தக்க வைத்த சாதனையை கே.எல்.ராகுல் தவறவிட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

KLRAHUL, INDVSSA, TEAMINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்