‘பாய்ந்து சென்று ரன் அவுட்’... ‘மரண மாஸ் காட்டிய கேப்டன்’... 'ஸ்டென்னாகிப் போன பேட்ஸ்மேன்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்துக்கு எதிரானப் போட்டியில் தோனியை போன்றே கேஎல் ராகுல் ரன் அவுட் செய்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நியூசிலாந்து மவுண்ட் மவுங்கனியில் நடைபெற்ற போட்டியில், 4-வது ஓவரில், 2-வது பந்தை நவ்தீப் சைனி வீசினார்.  அந்தப் பந்தை அடித்துவிட்டு நியூசிலாந்து வீரர் டிம் சைஃபர்ட் ரன் எடுக்க ஓட, எதிர்முனையில் இருந்த டாம் ப்ரூஸ் அப்படியே நின்றிருக்க பின்னர் சுதாரித்துக்கொண்டு மெதுவாக ரன் எடுக்க ஓடிவந்தார். அப்போது பேட்ஸ்மேன்கள் இடையே ஏற்பட்ட குழப்பத்தில், ஸ்டம்ப் அருகில் எந்த பேட்ஸ்மேனும் இல்லை.

தனது கையில் வந்த பந்தை சஞ்சு சாம்சன் த்ரோ செய்ய, அது ஸ்டெம்பில்  படாமல், விக்கெட் கீப்பிங் செய்த கேஎல் ராகுல் கையில் சிக்கியது. அப்போது டாம் ப்ரூஸ்  ஓடிவருவதற்குள் சற்றும் யோசிக்காமல், துரிதமாக செயல்பட்டு ராகுல் பாய்ந்து சென்று ஸ்டெம்பிங் செய்தார். இதனால் ரன் ஏதும் எடுக்காமலேயே டாம் ப்ரூஸ் ரன் அவுட் ஆனார். 

இந்தப் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். ஆனால் காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் ரோகித் வெளியேறியதும், கேஎல் ராகுல் கேப்டனாகவும் செயல்பட்டார். தோனி போலவே ரன் அவுட் செய்ததாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பேட்டிங், விக்கெட் கீப்பிங்கில் கலக்கி வரும் கேஎல் ராகுல், 5 போட்டிகள் கொண்ட டி20யில் சிறப்பாக விளையாடி 224 ரன்கள் விளாசிய நிலையில், தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

MSDHONI, KLRAHUL, CRICKET, IND VS NZ, RUN OUT, WIKET KEEPING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்