‘சான்ஸ் இருந்தும்’... ‘நூழிலையில் தகர்ந்த கனவு’... ‘நினைச்சத செய்ய முடியல’... ‘ரொம்ப வேதனையா இருக்கு!’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தோல்வியடைந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ப்ளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியதால், அதன் கனவு தகர்ந்து போயுள்ளது.

இன்று நடைபெற்ற 55-வது ஐபிஎல் லீக் போட்டியில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற, கட்டாயம் வென்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் பஞ்சாப் அணி இருந்தது. ஆனால், இந்தப் போட்டியில் சென்னை அணி 18.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு சென்னை 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் வேதனையடைந்த பஞ்சாப்  அணியின் கேப்டன் கே எல் ராகுல் தோல்விக்கான காரணம் குறித்து கூறுகையில், தங்களது அணியின் பொறுப்பற்ற பேட்டிங் தான் இதற்கு காரணம் என்று தெரிவித்தார்.

இது குறித்து கே.எல் ராகுல் பேட்டியளிக்கையில், ‘நாங்கள் பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை. எங்கள் மீது அதிகமான அழுத்தம் ஏற்பட்டது. நாங்கள் 180 முதல் 190 ரன்களாவது எடுக்க வேண்டும் என்றே நினைத்திருந்தோம். ஆனால் எங்களால் நாங்கள் நினைத்த ரன்களை கூட அடிக்க முடியாதது, மிகுந்த வேதனையாக உள்ளது. முதல் பாதியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சொதப்பியதால், தொடர் தோல்விகளை சந்தித்த நாங்கள் அடுத்த பாதியில் மிகச்சிறப்பாக விளையாடினோம்.

போராடியே முதல் நான்கு இடத்திற்குள் வந்தோம். ஆனால் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இந்த தொடரை மறந்துவிட்டு அடுத்த தொடரில் முழு பலத்துடன் மீண்டு வருவோம் என்று நம்புகிறேன். எங்களை தேடி வந்த வெற்றிகளை கூட நூழிலையில் தவறவிட்டதே எங்களின் இந்த நிலைமைக்கு காரணம்’ என்று வேதனை தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்