மொதல்ல நான் 'ரைட் ஹேண்ட்' பேட்ஸ்மேன்...! பேட்டிங் பண்ணினா 'அவர' மாதிரி பண்ணனும்னு சொல்லி தான் 'லெஃப்ட்' - க்கு மாறினேன்...! - முன்னாள் வீரரை புகழ்ந்து தள்ளிய இளம் வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தன்னுடைய பேட்டிங் சிறப்பாக இருப்பதற்கான காரணத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.

2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி-20 போட்டியின் 34-வதுலீக் ஆட்டத்தில் நேற்று (23-09-2021) கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதிகொண்டன. அதில் 20 ஓவரில் மும்பை அணி 156 ரன்களை சேர்தது.

அடுத்ததாக களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 29 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது.

இந்நிலையில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு காரணம் அந்த அணியில் இடம்பெற்றிருந்த தொடக்க வீரர்கள் ஆவார். தொடக்க வீரரான வெங்கடேஷ் 53 ரன்களும், திரிபாதி 74 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

தொடரின் வெற்றிக்கு பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வெங்கடேஷ் ஐயர் பிசிசிஐ டிவிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், 'என் மனதார நான் உண்மையை சொல்லவேண்டும் என்றால் எனக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வரவேண்டும் என்பது மிகுந்த ஆசை. ஏனென்றால் இந்த அணியில் தான் தாதா(கங்குலி) என் ஹீரோ, கேகேஆர் அணிக்கு தாதா கேப்டனாக இருந்தார்.

முதல் கொல்கத்தா அணி என்னை விலைக்கு வாங்கியப்போது கனவா நினவா என்றே எனக்கு புரியவில்லை. பலரை போன்று நான் கங்குலி அவர்களின் மிக பெரிய ரசிகன். என்னுடைய இந்த சிறப்பான பேட்டிங் மற்றும் புகழுக்கும் காரணம் தாதா கங்குலிதான் காரணம்.

எனக்கு கிரிக்கெட் அறிமுகம் ஆகும் போது நான் வலது கை பேட்டிங் செய்து கொண்டிருந்தேன். ஆனால், அவரை பார்த்த பிறகே இடதுகை பேட்டிங்கிற்கு மாறினேன், கங்குலி போன்று பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.

அவர் அடிக்கும் சிக்ஸர், பவுண்டரி போன்று அடிக்க பயிற்சி எடுத்தேன். என்னுடைய வாழ்க்கையில் தெரியாமல் மிகப்பெரிய பங்கு கங்குலிக்கு உண்டு' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்