‘சீக்கிரம் உங்களை கேப்டனா பார்க்கணும்’!.. ‘அதுக்கான எல்லா தகுதியும் உங்ககிட்ட இருக்கு’.. சர்ச்சையை கிளப்பிய தினேஷ் கார்த்திக்.!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் பேட் கம்மின்ஸுக்கு தினேஷ் கார்த்திக் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பாக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ், நேற்று தனது 28-வது பிறந்தநாளை கொண்டாடினார். தற்போது ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான விமான சேவை தடை செய்யப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய சக வீரர்களுடன் அவர் மாலத்தீவில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் பேட் கம்மின்ஸிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது. அதில் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன், ஆண்ட்ரே ரசல், ஷுப்மன் கில், பிரஷித் கிருஷ்ணா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

அப்போது பேசிய தினேஷ் கார்த்திக், ‘உங்களைப்போல் (கம்மின்ஸ்) ஒரு வீரர் கிடைத்தது எங்களுடைய அதிர்ஷ்டம்தான். நீங்கள் உலகின் தலை சிறந்த வீரர். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சீக்கிரம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆகுவதற்கு எனது வாழ்த்துகள். அதற்கான திறமைகள் உங்களிடம் உள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி விளையாடியது. அதில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. விராட் கோலி, பும்ரா, உமேஷ் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல், இளம் வீரர்களை வைத்தே இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என அப்போது கோரிக்கை எழுந்தது.

அந்த சமயம் ஸ்டீவன் ஸ்மித், பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் டிம் பெய்ன் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறி, ஆஸ்திரேலிய கிரிக்கெட்  வாரியம் அதனை நிராகரித்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸிக்கு வாழ்த்துக்கள் என தினேஷ் கார்த்திக் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்