அச்சோ! இது மட்டும் நடக்காம இருந்திருந்தா.. நேத்து மேட்ச்ல இவர்தான் ‘ஹைலைட்’... ரசிகர்கள் ஆதங்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

Advertising
>
Advertising

Also Read | 'கருடவேகா' மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான 6 அடி உயர “தெலுங்கானா தல்லி” சிலை.. முழு விபரம்!

ஐபிஎல் தொடரின் 66-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்களை குவித்தது. இதில் விக்கெட் கீப்பர் டி காக் 140 ரன்களும், கேப்டன் கே.எல்.ராகுல் 68 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினர்.

இதனை அடுத்து 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் அபிஜித் தோமர் ஆகிய இருவரும் களமிறங்கினர். ஆனால் வெங்கடேச ஐயர் டக் அவுட்டாகியும், அபிஜித் தோமர் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (50 ரன்கள்) மற்றும் நிதிஷ் ராணா (42 ரன்கள்) நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இதனை அடுத்து வந்த சாம் பில்லிங்ஸ் 36 ரன்கள் அடித்து கைகொடுத்தார்.

ஆனாலும் 142 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தடுமாறியது. அப்போது களமிறங்கிய ஆல்ரவுண்டர் ரஸல் கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த இக்கட்டான சமயத்தில் ரிங்கு சிங் மற்றும் சுனில் நரேன் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த கூட்டணி கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்சருக்கு விளாசியது. அதனால் கடைசி ஓவரில் 21 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் கொல்கத்தா அணி இருந்தது.

அப்போது மார்கஸ் ஸ்டோனிஸ் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட ரிங்கு சிங், தொடர்ந்து 1 பவுண்டரி, 2 சிக்சர் விளாசி என மிரட்டினார். அதனால் கடைசி 3 பந்துகளுக்கு 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு கொல்கத்தா அணி வந்தது. இதனை அடுத்து அந்த ஓவரின் 4-வது பந்தில் 2 ரன்கள் வந்தது. கிட்டத்தட்ட வெற்றி பெரும் நிலையிலிருந்த கொல்கத்தா அணிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது

அந்த ஓவரின் 5-வது பந்தை ரிங்கு சிங் பவுண்டரிக்கு விளாசினார். ஆனால் லக்னோ அணியின் எவின் லூயிஸ் வேகமாக ஓடிவந்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அவுட் செய்தார். இது போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து கடைசி 1 பந்துக்கு 3 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் உமேஷ் யாதவ் களமிறங்கினார். ஆனால் கடைசி பந்தில் அவர் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். அதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் கொல்கத்தா தோல்வியை தழுவியது.

ஆனாலும் 15 பந்துகளில் 40 ரன்கள் (4 சிக்சர், 2 பவுண்டரி) அடித்து வெற்றியின் அருகே கொண்டு சென்ற இளம் வீரர் ரிங்கு சிங்கிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். எவின் லூயிஸ் மட்டும் கேட்ச் பிடித்து அவுட் செய்யாவிட்டால் நேற்றைய போட்டியின் ஹீரோ ரிங்கு சிங் தான் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

 

CRICKET, RINKU SINGH, KKR, LSG, EVIN LEWIS, KKRVSLSG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்