அன்னைக்கு நீ 'கலங்கினாலும்' இன்னைக்கு 'எங்க' மனசுல நின்னுட்டையா...! 'இந்தியர்களுக்காக' பேட் கம்மின்ஸ் செய்த 'நெகிழ' வைக்கும் காரியம்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது பரவல் சுனாமியாக சுழன்று அடித்து வருகிறது. இந்த சுனாமியில் அப்பாவி பொதுமக்கள் கொத்துகொத்தாக சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் இடம் இல்லாமலும், அவரச உதவிக்கு முக்கியமான ஆக்சிஜன் கிடைப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆங்கில நாளிதழ்களில் வெளியான செய்தி உலகமெங்கிலும் பரவி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் உலகின் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்க உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், ஆக்சிஜன் வாங்கி சப்ளை செய்வதற்காக, அவரால் முடிந்த அளவிற்கு 50 ஆயிரம் அமெரிக்கா டாலர் (இந்திய பண மதிப்பில் ரூ. 37,36,590.00)  பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

மேலும், ஐபிஎல் போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களையும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்ய வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இந்திய மக்களிடம் இருக்கும் அன்பும் கனிவும் நான் வேறு எங்குமே கண்டதில்லை. இந்தியா இப்போது மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கலாமா கூடாது என விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த மாதிரி நேரத்திலும் ஏன் கிரிக்கெட் விளையாட்டு நடத்த வேண்டும் என நினைக்கலாம். ஆனால் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் நிலையில், கிரிக்கெட் அவர்களுக்கு சிறிய சந்தோசத்தை இந்த போட்டிகள்  அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சக வீரர்களும் தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்