‘இதெல்லாம் ஐபிஎல் விதிக்கு எதிரானது’!.. கோபத்தில் தினேஷ் கார்த்திக் செய்த செயல்.. சர்ச்சையை கிளப்பிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அவுட்டான கோபத்தில் செய்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் (IPL) ப்ளே ஆஃப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 36 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களும் எடுத்தனர்.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர்களான லோக்கி பெர்குசன் மற்றும் சிவம் மாவி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான வெங்கடேஷ் ஐயர் 55 ரன்களும், சுப்மன் கில் 46 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik) கோபத்தில் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியில் 6-வது வீரராக பேட்டிங் செய்ய தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். அப்போது அணியில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டு இருந்தது. அதனால் யாராவது ஒரு வீரர் நிலைத்து ஆட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த சமயத்தில் ரபாடா வீசிய 18-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் (0) போல்டாகி வெளியேறினார். இதனால் கோபமடைந்த அவர், கையால் ஸ்டம்ப்பை தட்டிவிட்டுச் சென்றார். இதுகுறித்து அம்பயர்கள் ஐபிஎல் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க ஐபிஎல் நிர்வாகம் தயாரானது. ஆனால் தினேஷ் கார்த்திக் தனது தவறை ஒப்புக்கொண்டதால், அவருக்கு ஒரு முறை வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்