ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் பிரபல கொல்கத்தா அணி வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் போட்டிகள் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் முக்கிய வீரர்கள் சிலர் காயம் காரணமாக இந்த ஆண்டு தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் பும்ரா இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என தெரிகிறது. சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் ஓய்வில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. மற்றொரு மும்பை வீரரான ரிச்சர்ட்சன் கிளப் கிரிக்கெட் போட்டியின் போது காயமடைந்த நிலையில் அவரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

அதேபோல, டெல்லி அணியின் ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் தொடரை பங்கேற்க மாட்டார் என அந்த அணி அறிவித்திருந்தது. விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் பண்டுக்கு பதிலாக டெல்லி அணியை வார்னர் வழிநடத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் கொல்கத்தா அணியின் ஷாகிப் அல் ஹசன் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது அயர்லாந்து - வங்கதேசம் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஹசன் விளையாடி வருகிறார். மேலும் சில தனிப்பட்ட காரணங்களினாலும் அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிகிறது. பஞ்சாப் அணியுடனான முதல் போட்டியிலும் கொல்கத்தா அணியில் ஹசன் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

IPL, KKR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்