‘திடீர்னு மேல இருந்து கிரவுண்டுக்குள் விழுந்த பொருள்’.. 49-வது ஓவரில் நடந்த பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது மைதானத்துக்குள் பட்டம் ஒன்று பறந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் பேட்டிங் செய்ய களமிறங்கினர். இதில் ரோஹித் ஷர்மா 10 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல் கூட்டணி நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் அதிகபட்சமாக தவான் 74 ரன்களும், கே.எல்.ராகுல் 47 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த், ஜடேஜா கூட்டணி சற்று ஸ்கோரை உயர்த்த முயற்சித்தது. ஆனாலும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டை இந்திய அணி இழந்து வந்தது.

போட்டின் 49 ஓவரின் போது திடீரென பட்டம் ஒன்று மைதானத்துக்குள் விழுந்தது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதனால் போட்டி சில நிமிடம் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து 49.1 ஓவரில் 255 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 258 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் (128) மற்றும் ஆரோன் ஃபின்ஞ் (110) சதமடித்து அசத்தினர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்