'அடுத்த கேப்டன் யார்னு... கோலியே அறிவிக்கப் போறாரு'!.. பீதியை கிளப்பிய முன்னாள் வீரர்!.. மீண்டும் தொடங்கியது சர்ச்சை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் அடுத்த கேப்டனாகும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பதற்கு முன்னாள் வீரர் கிரண் மோரே கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில், டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. எனினும், இவரது ஆட்டத்திறன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை. பிரஷர் அதிகமாக இருந்தாலும், தனது ரன் வேட்டையில் எந்தவித சுணக்கமும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்.
எனினும், டி20, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது கேப்டன்ஷிப் குறித்து அவ்வப்போது சில சலசலப்புகள் எழுந்து போனதை வரலாறு அறியும். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட்டின் வெவ்வேறு வடிவங்களுக்கு, வெவ்வேறு கேப்டன்கள் விரைவில் நியமிக்கப்படலாம் என்று இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு முன்னாள் தலைவரும், முன்னாள் இந்திய விக்கெட் கீப்பருமான கிரண் மோரே கூறியுள்ளார்.
இவரது இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒவ்வொரு கேப்டன் என்ற அணுகுமுறையை நோக்கி நகர்வதாக நான் நினைக்கிறேன். இதனால், ரோஹித் ஷர்மாவுக்கு விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.
விராட் கோலி, முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் விளையாடிய ஒரு புத்திசாலி வீரர். கோலி, ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு இன்னும் எவ்வளவு காலம் கேப்டனாக இருக்க வேண்டும் என்பது குறித்து கோலியும் சிந்திப்பார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இந்த முடிவுகளைப் பற்றி நீங்கள் அதிகம் விவாதிப்பீர்கள் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் மற்றும் இயன் மோர்கன் கேப்டன்களாக உள்ளனர். ஆஸ்திரேலியாவில், டிம் பெய்ன் மற்றும் ஆரோன் ஃபின்ச் கேப்டன்களாக செயல்படுகின்றனர். இதேபோன்ற அணுகுமுறை இந்தியாவில் ஒர்க் அவுட் ஆகும் என்கிறார் கிரண் மோரே.
இதுகுறித்து அவர் பேசியபோது, இந்தியாவில் இந்த அணுகுமுறை எடுபடும். இந்திய அணியின் எதிர்காலம் குறித்து சீனியர் வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. விராட் கோலி, மூன்று வடிவ இந்திய அணிக்கும் கேப்டனாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர் சிறப்பாகவும் விளையாட வேண்டும். அது அவ்வளவு எளிதானது அல்ல.
எனினும், கேப்டனாகவும், தனி வீரராகவும் அவர் வெற்றி பெறுவதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், விராட் கோலி ஒரு நாள், இது போதும், ரோஹித் அணியை வழிநடத்தட்டும் என்று சொல்லும் ஒரு காலம் வரும் என்று நான் நினைக்கிறேன் என்று மோரே கூறியிருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில், அஜின்க்யா ரஹானே துணை கேப்டனாக இருக்க, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோஹித் துணை கேப்டனாக செயல்படுகிறார். குறிப்பாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் விராட் கோலி தலைமையில் இந்தியா மெகா தோல்வி அடைய, ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என்று கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.
அதுமட்டுமின்றி, ரோஹித்தும், டி20 போட்டிகளில் தலைசிறந்த கேப்டனாக செயல்படுகிறார். அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
பூதாகரமான லட்சத்தீவு விவகாரம்!.. மௌனம் கலைத்த முதல்வர் ஸ்டாலின்!.. என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?
தொடர்புடைய செய்திகள்
- 'நாங்க பாரபட்சம் பார்க்குறோமா?.. வந்து நீங்களே பாருங்க'!.. உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய பிசிசிஐ!.. தரமான பதிலடி!
- கோலி, ரோகித் போட்ட சைலண்ட் பார்ட்னர்ஷிப்!.. அசைக்க முடியாத வலுவோடு இந்திய அணி!.. ஐசிசி வெளியிட்ட மாஸ் தகவல்!
- ஜடேஜா சூப்பரா விளையாடுறாரு.. அதனால்தான் எனக்கு ‘டீம்ல’ இடம் கிடைக்கல.. இந்திய அணியின் இளம் வீரர் ஆதங்கம்..!
- மறுபடியும் எப்போ ‘ஐபிஎல்’ தொடங்கும்..? ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்கள்.. வெளியான ‘சூப்பர்’ தகவல்..!
- 'என்னை எதுக்கு டீம்ல எடுக்குறீங்கனு... தோனியே கேட்பார்'!.. பீதியை கிளப்பிய ஆகாஷ் சோப்ரா!.. கசிந்தது ரகசியம்!.. சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்!
- பட்டைய கிளப்பிய வங்கதேச பவுலர்கள்!.. பெரிய அளவில் சறுக்கிய பும்ரா!.. பவுலிங்கில் நடந்த மாற்றங்கள்!.. ஐசிசி தரவரிசை சொல்வது என்ன?
- "'ரெண்டு' நாள் முன்னாடி தான்.. இந்தியா 'டீம்'ல 'சான்ஸ்' கிடைக்காம போனத நெனச்சு 'ஃபீல்' பண்ணாரு.. அதுக்குள்ள இப்டி ஆயிடுச்சே.." அதிர வைத்த 'பிசிசிஐ'??.. 'காரணம்' என்ன??
- 'வாய்க்கு வந்தத பேசாதீங்க'!.. பூதாகரமான சம்பள பாக்கி சர்ச்சை!.. மர்மங்களை உடைத்த பிசிசிஐ அதிகாரி!.. நடந்தது என்ன?
- 'இன்னும் ஆரம்பிக்கவே இல்ல... அதுக்குள்ள சிக்கல் வந்துடுச்சு'!.. அமீரகத்தில் ஐபிஎல் நடத்துவதில்... பிசிசிஐ-க்கு புதிய தலைவலி!
- 'ஐபிஎல் முக்கியம் தான்... அதுக்காக இப்படியா'!?.. சர்வதேச தொடரை... ரத்து செய்யும் அளவுக்கு பிசிசிஐ தீவிரம்!.. ஐசிசி செம்ம ஷாக்!