நான் அவர நினைச்சு ‘சிரிக்கல’.. அப்றம் ஏன் அத ‘டெலிட்’ பண்ணீங்க.. மறுபடியும் ரசிகர்களின் ‘கோபத்துக்கு’ ஆளான கலீல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே வீரர் பிராவோவின் விக்கெட்டை எடுத்ததும் நக்கல் அடிக்கும் விதமாக சிரித்த சம்பவம் குறித்து ட்வீட் செய்துவிட்டு அதனை கலீல் அகமது டெலிட் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி கடந்த செவ்வாய் கிழமை (13.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதாராபாத்தை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்தநிலையில் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, சென்னை அணியின் ஆல்ரவுண்டர் பிராவோவின் விக்கெட்டை எடுத்ததும் நக்கல் அடிக்கும் விதமாக சிரித்த சம்பவம் ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது . அப்போட்டியின் கடைசி ஓவரை ஹைதராபாத் அணி வீரர் கலீல் அகமது வீசினார். அதற்கு முந்தைய ஓவரின் கடைசி பந்தில் தோனி அவுட்டானதால், அடுத்ததாக பிராவோ களமிறங்கினார். அப்போது கலீல் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை சந்தித்த பிராவோ போல்ட்டாகி அவுட்டானார். இந்த ஐபிஎல் சீசனில் பிராவோ சந்திக்கும் முதல் பந்து இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் பிராவோ அவுட்டானதும் நக்கல் அடிக்கும் விதமாக கலீல் அகமது தனது வாயை மூடி சிரித்தார்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, கலீல் மோசமான அணுகுமுறை கொண்ட பந்துவீச்சாளர், மைதானத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால் இந்த சம்பவம் குறித்து கலீல் அகமது ஒரு ட்வீட் செய்தார். அதில், ‘நான் பிராவோவை நினைத்து சிரிக்கவில்லை. அதற்கு வேறு சில காரணங்கள் உள்ளன. அவர் ஒரு லெஜண்ட். எனக்கு மூத்த அண்ணன் போன்றவர்’ என பதிவிட்டு பின்னர் டெலிட் செய்துவிட்டார்.

முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராகுல் திவாட்டியா உடன் கலீல் அகமது வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடும் விமர்சனத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்