'என்னோட மனசு முழுக்க அங்கேயே தான் இருக்கு'!.. இந்தியா குறித்து... வேதனை தாங்காமல் கெவின் பீட்டர்சன் உருக்கம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருட இயல்பு வாழ்க்கையை முற்றிலும் புரட்டிபோட்ட கொரோனா என்னும் கொடிய வைரஸின் இரண்டாம் அலை தற்போது உலகம் முழுவதும் தீயாக பரவி வருகிறது. முதல் அலையில் பரவிய கொரோனா வைரஸை விட முற்றிலும் மாறுபட்டுள்ள அதிக தீவிரம் கொண்ட இரண்டாவது அலை கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது.

கொரோனாவின் கோரதாண்டவத்தையே கட்டுப்படுத்த முடியாமல் ஆட்சியாளர்கள் திணறி வரும் நிலையில், தற்போது அதை விட மிகப்பெரும் பிரச்சினையாக ஆக்சிஜன் பற்றாக்குறையும் நாடு முழுவதும் ஒலித்து வருகிறது. கொரோனாவை விட ஆக்‌சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து விடுமோ என்று அச்சப்படும் அளவிற்கு ஒட்டுமொத்த இந்தியாவுமே மிகப்பெரும் பேராபத்தில் இருப்பதை அனைவரும் கண் கூடாக பார்த்து வருகிறோம்.

கொரோனாவால் மக்கள் கொத்து கொத்தாக மடிந்து வரும் நிலையில், இந்த கேளிக்கைகள் எல்லாம் தேவை தானா என்ற கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. வீரர்கள் அனைவரும் பயோ பபுளை விட்டு வெளியேறாமல் அதிக பாதுகாப்புடனே இருக்கின்றனர்.

               

அதனால் திட்டமிட்டப்படி அனைத்து போட்டிகளும் நடந்தே தீரும் என ஐபிஎல் அதிகாரிகள் கூறி வந்தாலும், யாரோ ஒரு சிலர் செய்த தவறுகள் ஐபிஎல் தொடரிலும் கால் பதித்த கொரோனா பல்வேறு கிரிக்கெட் வீரர்களையும் தாக்கியுள்ளது. சஹா, மைக்கெல் ஹசி போன்றவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டபின்பு தான் ஐபிஎல் தொடரை ஒத்தி வைக்கும் முடிவை பிசிசிஐ எடுத்தது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கும், நாடுகளுக்கும் திரும்பிவிட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடிய இளம் வீரர்கள் சிலர் இந்த தொடர் குறித்தான தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அதே போல் வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்தியாவில் நிலவி வரும் அசாதாரன சூழல் குறித்து தங்களது வேதனைகளையும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக தங்களது ஆறுதல்களையும், தங்களால் முடிந்த உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன், தனக்கு அதிகமான அன்பை கொடுத்த இந்திய மக்கள் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

இது குறித்து கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் இந்தியாவில் இருந்து தற்போது நாடு திரும்பிவிட்டாலும், எனது சிந்தனைகள் அனைத்தும் எனக்கு அதிகமான அன்பு கொடுத்த இந்தியா மீது தான் உள்ளது. இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையும் கடந்து போகும். அனைவரும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்" என்று ஹிந்தி மொழியில் பதிவிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்