"எந்த ஐபிஎல் மேட்ச்'லயும் இப்டி ஒரு சம்பவத்த பாத்ததில்ல.." 'இளம்' வீரரின் செயலால் மிரண்டு போன 'பீட்டர்சன்'!.. "பையன் பட்டையை கிளப்பிட்டான் போங்க!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசனின் நேற்றைய போட்டியில், பஞ்சாப் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருந்தது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 123 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் ஆட்ட நாயகன் விருதும் வென்றிருந்தார்.

இதனிடையே, இந்த போட்டியில், பஞ்சாப் அணியின் இளம் வீரர் ரவி பிஷ்னாய் (Ravi Bishnoi) பிடித்துள்ள கேட்ச் ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி இருந்தது. கொல்கத்தா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, மூன்றாவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரை எதிர்கொண்ட சுனில் நரைன் (Sunil Narine), மிட் விக்கெட் திசையில் ஓங்கி அடித்தார்.

அப்போது, அந்த பகுதியில் ஃபீல்டிங் நின்ற ரவி பிஷ்னாய், பந்தை நோக்கி ஓடி வந்த நிலையில், கைக்கு எட்டாத பந்தை, மிகவும் அற்புதமாக டைவ் அடித்து கேட்சாக மாற்றினார். யாரும் எதிர்பாராத வகையிலான கேட்ச் ஒன்றைப் பிடித்து, இளம் வீரர் ரவி பிஷ்னாய் அசத்திய நிலையில், இந்த சீசனின் சிறந்த கேட்ச் இது தான் என பாராட்டி வருகின்றனர்.

 



இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் (Kevin Pietersen), பிஷ்னாயின் கேட்சைக் கண்டு அரண்டு போயுள்ளார். இதுபற்றி, தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரின் சிறந்த கேட்ச் இது. வாவ், வாவ் வாவ் பிஷ்னாய்' என ஆச்சரியத்துடன் குறிப்பிட்டுள்ளார்.



பீட்டர்சனின் இந்த ட்வீட், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்