"உலகத்துக்கு எப்பவோ நிரூபிச்சுட்டார்!".. 7 ஆண்டுக்கு பின் நீங்கும் தடை.. ஸ்ரீசாந்த்துக்கு பச்சை கொடி காட்டும் கேரள கிரிக்கெட் வாரியம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகேரளா ரஞ்சி அணியில் இடம் பெற்று இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க வேண்டும் என்கிற தனது கனவை அடைவதற்கான முதல் கட்டத்தை மீண்டும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த அடைந்துள்ளார்.
ஐபிஎல் ஆட்டங்களில் spot-fixing முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி ஸ்ரீசாந்த் மற்றும், அவரோடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான அஜித் சண்டிலா , அங்கித் சவான் உள்ளிட்டோருக்கு பிசிசிஐ தடை விதித்தது. அதன் பின்னர் இந்த தடையை எதிர்த்து கேரள மற்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார் ஸ்ரீசாந்த். பின்னர் பிசிசிஐ ஒழுங்குமுறை குழுவின் ஆணையை நிராகரித்த உச்சநீதிமன்றம், ஸ்ரீசாந்தின் தண்டனை காலத்தை குறைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. இதன்படி 2013 செப்டம்பர் மாதம் முதல் 7 ஆண்டுகள் ஸ்ரீசாந்த்துக்கு கிரிக்கெட் ஆட தடை இருந்தது. அந்த தடை வரும் 2020 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைவதால் அவர் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடரலாம் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில்தான் ஸ்ரீசாந்தின் தடைக்காலம் செப்டம்பரில் முடிந்த பிறகு அவரை கேரள ரஞ்சி அணியில் சேர்த்துக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக கேரள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இதுபற்றி பேசிய கேரள அணியின் புதிய பயிற்சியாளர் டினு யோஹண்ணன், செப்டம்பரில் ஸ்ரீசாந்த்துக்கான தடைக்காலம் முடிந்த பின்னர், அவரை கேரள அணியில் சேர்த்துக்கொள்ள கேரள கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளதாகவும், அவருடைய உடல் தகுதியை கருத்தில் கொண்டுதான் அவர் அணியில் தேர்வு செய்யப்படுவார் என்றும், அவர் தனது உடல் தகுதியை அவர் நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதே சமயம், ஊரடங்கு சமயத்தில் மைதானத்துக்கு சென்று யாராலும் பயிற்சி பெற முடியாத சூழ்நிலையில் அவரது உடல் தகுதி பற்றி தற்போது எதுவும் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலு, கேரள அணிக்காக ஸ்ரீசாந்த் மீண்டும் விளையாட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருப்பதாகவும் அதனை வரவேற்பதாகவும் தெரிவித்த அவர் டினு யோஹண்ணன், ஸ்ரீசாந்த் தன்னுடைய திறமையை ஏற்கனவே உலகுக்கு நிரூபித்து விட்டதாகவும், அதனால் மீண்டும் நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை என்றும், அவருக்கு ஆதரவளிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே கேரளா அணியில் மீண்டும் இடம் பிடிப்பதற்காக தீவிர பயிற்சியில் ஸ்ரீசாந்த் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: 5 வயசு மகனுடன் ‘கிரிக்கெட்’ விளையாடிய அப்பா.. நொடியில் நடந்த சோகம்.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி காட்சி..!
- 'என்ன நியாபகம் வச்சு இர்பான் பதான் பணம் அனுப்பிருக்கார்...' 'கண்டிப்பா இந்த காசை திருப்பி கொடுப்பேன்...' நெகிழ்ச்சியடையும் செருப்பு தைக்கும் தொழிலாளி...!
- ‘குறுக்கே எதுவும் இல்லை என நினைத்து கண்ணாடிக் கதவில் மோதி’.. “ஒன்னும் ஆகல” என எழுந்து சகஜமாகிய பின் உயிரிழந்த பெண்!
- 'ஊரடங்கு நேரத்திலும் ஊழியர்களுக்கு வாரி வழங்கிய தொழிலதிபர்'... 'எங்க சார் இருக்கு உங்க கம்பெனி'... ஒரே நாளில் பலரின் செல்லப் பிள்ளையான முதலாளி!
- 2 'பல்பு' எரிஞ்சதும், கொஞ்ச நேரம் 'டிவி' பாத்ததும் குத்தமா?... 'கரண்ட்' பில் பாத்து ஒரு நிமிஷம் 'தலையே' சுத்திருச்சு!
- மிக 'எளிமை'யான முறையில்... நடந்து முடிந்த 'முதல்வர்' வீட்டுக் 'கல்யாணம்'!
- '33 கோடியே ஒண்ணு...' 'தாயே கொரோனா...' உனக்கு 'முக்கால பூஜை' நடத்துறோம்... 'கொஞ்சம் அமைதியா இரு...' 'சேட்டனின்' வேற லெவல் 'முயற்சி...'
- 'உன்னோட உயிரை பத்தி நெனச்சு கூட பாக்கலையே மா'... 'அசந்து போக வைத்த கேரள மாணவி'... நெகிழ வைக்கும் சம்பவம்!
- 'முன்னாள் கிரிக்கெட் வீரரை கொன்ற மகன்...' 'போதையில அப்பா இறந்து போனதே தெரியல...' விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள்...!
- 'அவர் முகத்த ஒரு தடவ எனக்கு காட்டுங்களேன்...' 'கதறிய மனைவிக்கு கடைசியில...' கணவர் இறந்து போன விஷயமே இப்படி தான் தெரிஞ்சுருக்கு...!