‘உலகக் கோப்பையில் நான் சரியா விளையாடல’... 'மனம் திறந்து பேசிய இந்திய வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பையில் தான் சரியாக விளையாடவில்லை என்றும், நிறைய பாடங்களை கற்றுக்கொண்டதாகவும் இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ் தெரிவித்தார்.
டிஎன்பில் கிரிக்கெட் தொடரின் 4-வது சீசன் தமிழகத்தில் நடைப்பெற்று வருகிறது. நத்தத்தில் நடைபெற்ற போட்டியை சிறப்பிக்க, இந்திய அணி வீரர் கேதார் ஜாதவ் வருகை தந்தார். அப்போது பேசிய அவர், ‘இதுபோன்ற தொடர்கள் வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து ஐபிஎல், ரஞ்சி போட்டிகளில் இடம்பெற மிகவும் உதவுகிறது. இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள், இந்தியா முழுவதும் கவனிக்கப்படுவார்கள்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இயற்கை வளம் மிகுந்த அழகான இடமாக நத்தம் இருக்கிறது. சமீப காலங்களில் இந்தியாவில் நிறைய மைதானங்கள் வளர்ந்து வருவது, கிரிக்கெட் வளர்ச்சி உதவியாக இருக்கும். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் நான் சரியாக விளையாடவில்லை. இருப்பினும் வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களை கற்றுத் தருகிறது’ என்றார்.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர், வெள்ளிக்கிழமை இரவு திண்டுக்கல்லில் தொடங்கியது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. அஸ்வின் அதிரடியால், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சிறந்த நியூஸிலாந்துக்காரர்' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட, WorldCup-ல் கலக்கிய 'இங்கிலாந்து' வீரர்!
- ‘இனி கேப்டனும் பயிற்சியாளருமே இதில் முடிவெடுக்கலாம்..’ குழு சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பிசிசிஐ..
- ‘தோனியை ட்ராப் பண்றதுக்கு முன்னாடி’... ‘அவருகிட்ட போய் பேசுங்க’... 'முன்னாள் அதிரடி வீரர் விருப்பம்'!
- ‘கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி பயிற்சியாளர்’... ‘எந்த ஐபிஎல் அணிக்கு நியமனம்??’
- ‘இந்திய அணி குறித்த சர்ச்சைகளுக்கு..’ முற்றுப்புள்ளி வைத்துள்ள அணி நிர்வாகம்..
- ‘இதுல கோலி சொல்றதுக்கெல்லாம் எதுவும் இல்ல..’ பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியாகியுள்ள புதிய தகவல்..
- ‘உலகக் கோப்பை சூப்பர் ஓவரின்போது’... ‘நியூசிலாந்து வீரரின் பயிற்சியாளர் உயிரிழப்பு'!
- 'உலகக்கோப்பை வெற்றியை சரியாக கணித்த 'ஜோதிடர்'... 'தோனி'யின் ஓய்வு குறித்து பரபரப்பு தகவல்'!
- இறுதிப் போட்டி குறித்து ட்வீட் செய்த பிரபல முன்னாள் வீரர்’... ‘பதிலளித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்’!
- உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு.. ‘தனது முடிவைத் தெரிவித்துள்ள விராட் கோலி..’