VIDEO: ‘ஜெயிக்கறதுக்காக இப்படியா பண்றது’!.. ஒலிம்பிக்கில் இந்திய வீரருக்கு நடந்த கொடுமை.. கொதித்த நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமாரை கஜகஸ்தான் வீரர் ஆக்ரோஷமாக கடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு, பிவி சிந்து மற்றும் லவ்லினா ஆகியோர் பதக்கங்களை வென்றுள்ளனர். இதனை அடுத்து கால்இறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளில் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் சறுக்கினர்.

இந்நிலையில், இந்திய குத்துச்சண்டை வீரர் ரவிக்குமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தது இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. நேற்று ஆண்கள் 57 எடைப்பிரிவுக்கான அரையிறுதி மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியாவும், கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேயும் மோதினர்.

இப்போட்டியில் 5-9 மற்றும் 7-9 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவை வீழ்த்தி இறுதிப்போட்டி ரவிக்குமார் தாஹியா முன்னேறினார். இதனிடையே, இப்போட்டியில் கஜகஸ்தான் வீரர் வெற்றிக்காக விதிகளை மீறியது தற்போது தெரிய வந்துள்ளது.

போட்டியின் கடைசி கட்டம் பரபரப்பாக சென்றுகொண்டிருந்தபோது கஜகஸ்தான் வீரரை ரவிக்குமார் தாஹியா தனது கையால் வளைத்து பிடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது நூரிஸ்லாம் சனயே, ரவிக்குமார் தாஹியாவின் கையை கொடூரமாக கடித்து வைத்தார். ஆனாலும் அந்த வலியை தாங்கிக்கொண்டு, விடாப்பிடியாக போராடி ரவிக்குமார் தாஹியா வெற்றி பெற்றுள்ளார்.

கஜகஸ்தான் வீரர் ஆக்ரோஷமாக கடித்ததில் ரவிக்குமார் தாஹியாவின் கையில் ஆழமாக பல் தடம் பதிந்து காயம் ஏற்பட்டது. உடனே இதனை நடுவரிடம் ரவிக்குமார் தாஹியா கூறினார். ஆனால் நடுவர் அதை பொருட்படுத்தவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்த போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

இந்த நிலையில் கஜகஸ்தான் வீரரின் விதிமீறல் செயலுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற விதிமீறல்களை ஒலிம்பிக் கமிட்டியினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்