'அவர் போட்ட ஒரே ஒரு ட்வீட்'... 'யாருங்க இவங்க'... 'பரபரப்பாக சென்ற ஐபிஎல் ஏலம்'... அதையும் தாண்டி தீவிரமாக தேடிய நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பரபரப்பாக ஐபிஎல் ஏலம் சென்று கொண்டிருந்த நேரத்தில் ஒருவரை மட்டும் நெட்டிசன்கள் இணையத்தில் தீவிரமாகத் தேடினார்கள்.

14ஆவது  ஐபில் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நிறைவு பெற்றது. இதில், 145 கோடி ரூபாய்க்கு  57 வீரர்களை ஏலம் எடுக்கப்பட்டனர். ஐபில் வரலாற்றில் இல்லாத வகையில் அதிகபட்சமாக 16 கோடியே 25 லட்சத்திற்கு கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.  கைல் ஜெமீசன் 15 கோடிக்கும், கிளன் மேக்ஸ்வேலை 14 கோடியே 25 லட்சத்திற்கும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி எடுத்தது.

இதனிடையே பெங்களூர் அணியும், ஹயே ரிச்சர்ட்சன் 14 கோடிக்கும், தமிழக வீரரான சாருக்கானை 5 கோடியே 25 லட்சத்திற்குப் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகபட்சமாக கிருஷ்ணப்பா கௌதமை 9.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இந்நிலையில் ஐபிஎல் ஏலம் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில் ஒருவரை மட்டும் நெட்டிசன்கள் தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

அதற்கு முக்கிய காரணம் அவர் போட்ட ட்வீட். அவர் தான் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை செயல் அதிகாரி காவ்யா மாறன். அவர் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள். ஐபிஎல் ஏலம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில் அவர், Light, Camera, Action எனப் பதிவிட்ட ட்விட்டும் இணையத்தில் வைரலானது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் காவ்யாவின் பங்கு என்பது மிக முக்கியானது ஆகும். ஏலம் மட்டுமல்லாது போட்டி நடக்கும் நேரத்திலும் வீரர்களை அவர் உற்சாகப்படுத்துவது வழக்கம். இதற்கிடையே ஏலத்தில் சென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட கேதர் ஜாதவ் முதல் சில சுற்றுகளில் விலை போகவில்லை. அவர் பெயர் வரும் எந்த அணியும் கண் அசைவு கூட காட்டாமலே இருந்தன.

ஆனால் கடைசி சுற்றில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேதர் ஜாதவை அவரது அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கே அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. கேதர் ஜாதவ் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு 2 கோடி ரூபாயை செலவளித்திருந்தாலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முடிவை நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்