ஏலத்தில் மாஸ் செய்த SRH.. Harry Brook -யை வாங்கின அப்பறம் லாரா & காவ்யா கொடுத்த ரியாக்ஷன் தான் அல்டிமேட் 🔥 வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை ஏலத்தில் எடுத்த பிறகு காவ்யா மாறன் & பிரையன் லாரா கொடுத்த ரியாக்ஷன் வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

ஏலத்தில் மாஸ் செய்த SRH.. Harry Brook -யை வாங்கின அப்பறம் லாரா & காவ்யா கொடுத்த ரியாக்ஷன் தான் அல்டிமேட் 🔥 வைரல் வீடியோ!
Advertising
>
Advertising

Also Read | வில்லியம்சனை தட்டி தூக்கிய IPL அணி.. CSK-க்கு வருவார்னு எதிர்பார்த்தால் இந்த டீம் எடுத்துட்டாங்க!

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி  ஏலம், இன்று (22.12.2022) கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலையும், விடுவித்த வீரர்கள் பட்டியலையும் முன்னரே வெளியிட்டிருந்தது.

இந்த ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். 1.5 கோடி அடிப்படை விலையில் இருந்து ஹாரி புரூக்கை வாங்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே பலத்த போட்டி இருந்தது.

இதனால் ப்ரூக்கின் மதிப்பு ரூ. 13 கோடியைத் தாண்டியது, அந்த நேரத்தில் RR அணி வெளியேறியது. RR அணியிடம் 13.2 கோடி மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதியில் 13.25 கோடிக்கு ஹாரி புரூக் ஐதராபாத் அணிக்கு ஏலம் போனார்.

மாலை 5:30 மணி அளவில் ஹாரி புரூக் (13.25 கோடி), மயங்கா அகர்வால் (8.25 கோடி), ஹென்ரிச் கிளாசென் (5.25 கோடி), அடில் ரஷித் (2 கோடி), மயங்க் மார்கண்டே (50 லட்சம்), விவ்ராந்த் சர்மா (2.5 கோடி), சமர்த் வியாஸ் (20 லட்சம்), சன்விர் சிங் (20 லட்சம்), உபேந்திர சிங் யாதவ் (25 லட்சம்) ஆகியோரை சன் ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இதில் 13.25 கோடிக்கு ஹாரி புரூக்கை ஏலத்தில் எடுத்த பிறகு காவ்யா மாறன் & லாரா இருவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் சிரிப்பதற்கு முன் பரவசமடைந்து சில நொடிகள் காவ்யா மாறன் திகைத்து போன வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

 

Also Read | Harry Brook: யாருப்பா நீ.. 13.25 கோடிக்கு ஏலம் போன இளம் வீரர்.. வாங்க போட்டி போட்ட அணிகள்.. அப்படி என்ன ஸ்பெஷல் இவரு?

CRICKET, KAVIYA MARAN, BRIAN LARA, HARRY BROOK, IPL AUCTION 2023

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்