போன்ல பேசி சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா.. நாளுக்குநாள் பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை.. முன்னாள் கேப்டன் சொன்ன முக்கிய அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சவுரவ் கங்குலியும், விராட் கோலியும் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என கபில் தேவ் அறிவுரை வழங்கியுள்ளார்.

Advertising
>
Advertising

கேப்டன் பதவியில் கோலி இருந்து விலகல்

இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலி, அந்த பதவியில் இருந்து முழுமையாக விலகி தற்போது அணியில் சாதாரண வீரராக விளையாடி வருகிறார். கடந்த 2019-க்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் அடிக்க அவர் அடிக்கவில்லை. அதனால் இனி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆரம்பித்த சர்ச்சைகள்

ஆனால், விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியது முதல் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி வருகிறது. நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகினார். இதனை அடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் திடீரென ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை பிசிசிஐ நீக்கியது.

கங்குலி-கோலி மோதல்

அந்த சமயத்தில், டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை விலக வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார். ஆனால் கங்குலி தன்னிடம் அவ்வாறு எதுவும் கேட்கவில்லை என விராட் கோலி தெரிவித்தார். விராட் கோலியின் அந்த கருத்துக்கு ‘பதில் எதுவும் இல்லை, நேரம் வரும்போது பிசிசிஐ விளக்கம் கொடுக்கும்’ என கங்குலி தெரிவித்திருந்தார். இதனால் கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த சூழலில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகினார்.

கபில் தேவ் அட்வைஸ்

இந்த நிலையில் கங்குலியும், விராட் கோலியும் பேசி சமாதானம் ஆக வேண்டும் என இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து வார நாளிதழிலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய போது அவரின் மனதில் பல கேள்விகள் இருந்து வெளிப்பட்டது. நாம் கேட்டதையும், படித்ததையும் வைத்து சொல்லவேண்டுமானால், யாரும் அவரை கேப்டன் பதவியில் இருந்து விலக கூறவில்லை என்பது தெரிகிறது.

விராட் கோலி ஒரு மிகச் சிறந்த வீரர், அவரின் முடிவை மதிக்கிறோம். அவர்கள் (சவுரவ் கங்குலி- விராட் கோலி) இந்த பிரச்சனையை முடித்து கொள்ள வேண்டும். போனை கையில் எடுத்து மனம்விட்டு பேசி, இந்தியா மற்றும் இந்திய கிரிக்கெட்டை தலைநிமிர செய்ய வேண்டும்’ என கபில் தேவ் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்