"ஒன்னு ரெண்டு மேட்ச் நல்லா ஆடுனா போதுமா? அவரால அப்செட் ஆயிருக்கேன்.." சஞ்சு சாம்சன் பற்றி பேசிய இந்திய அணி முன்னாள் கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சஞ்சு சாம்சன் பற்றி உலக கோப்பை வென்ற முன்னாள் இந்திய கேப்டன் கூறிய கருத்துக்கள் பேசு பொருளாக மாறியுள்ளன.

Advertising
>
Advertising

Also Read | "மாட்டுக்கு வைத்தியம் பார்க்கனும்னு கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிவச்சிட்டாங்க சார்".. போலீசில் கதறிய கால்நடை டாக்டர்..!

கபில் தேவ் பொதுவாக இந்திய வீரர்களில் தற்போதைய செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக கவனிப்பவர். இவர் பெரும்பாலும் இளம் மற்றும் திறமையான வீரர்களுக்கு மிக உயர்ந்த பாராட்டுகளை வழங்குவார், மேலும் அதே நேரத்தில் மோசமான செயல்பாடுக்ளின் போது விமர்சனங்களும் செய்வார்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில், இந்திய அணியில் இடம் பெற சாத்தியம் உள்ள  விக்கெட் கீப்பர்களான ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் மற்றும் தினேஷ் கார்த்திக் என நான்கு விக்கெட் கீப்பர்-பேட்டர்கள் போட்டியில் இருப்பதால், இறுதி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில் ரிஷப் பண்ட் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

மூன்று வீரர்களுக்கிடையே யாரை தேர்வு செய்வது என்பது குறித்த கேள்விக்கு கபில் தேவ் பதில் அளித்துள்ளார், அதில், "மூவரும் பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் சமமான திறனைக் கொண்டவர்கள் என்று முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கூறுகிறார். இருப்பினும், அவர்களில் ஒரு கீப்பர் சஞ்சு சாம்சன் குறித்து கபில் தேவ் பேசும் போது மிகவும் வருத்தமடைந்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பற்றி கபில் தேவ் கூறியது,
"உண்மையைச் சொல்வதென்றால், இந்த மூவருக்கும் (கார்த்திக், இஷான் மற்றும் சாம்சன்) ஒரு சிறந்த விக்கெட் கீப்பரை நான் தேர்வு செய்ய வேண்டும் என்றால், அவர்கள் கிட்டத்தட்ட ஒரே மட்டத்தில் இருக்கிறார்கள் என்று நான் கூறுவேன். அதிக வித்தியாசம் இருப்பதாக என்னால் சொல்ல முடியாது. ஆனால் அடிப்படை பேட்டிங்கில், ஒவ்வொருவரும் மற்றவரை விட சிறந்தவர்கள், ஒரு குறிப்பிட்ட நாளில், மூன்று பேரும் இந்தியாவுக்காக போட்டியை தங்கள் விருப்பப்படி வெல்ல முடியும்.

நீங்கள் விருத்திமான் சாஹா பற்றி பேசினால், சாஹா மூவரில் ஒரு சிறந்த பேட்டர் என்று நான் கூறுவேன். நான் சஞ்சு சாம்சன் மீது மிகவும் வருத்தமாக உள்ளேன். அவர் மிகவும் திறமையானவர். ஆனால் அந்த பையன் 1-2 போட்டிகளில் ஸ்கோர் செய்கிறார், பின்னர் மோசமாக ஆடுகிறார். நிலைத்தன்மை இல்லை" என்று கபில் தேவ் கூறினார்.

சாம்சனுக்கு இந்திய அணியில் பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது, ஆனால் அவர் அதை பயன்படுத்தவில்லை அதனால் பின்தங்கினார். சாம்சன் இந்தியாவுக்காக 13 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் கூட இல்லாமல் 174 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் உடனான சாம்சனின் கடைசி இரண்டு சீசன்களில் அவர் முறையே 484 மற்றும் 458 ரன்கள் எடுத்துள்ளார், ஆனால் ஐபிஎல் 2022 இறுதிப் போட்டிக்கு அணியை வழிநடத்திய போதிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்பை சாம்சன் தவறவிட்டார்.

Also Read | 20 வருடங்களாக தலைமறைவு.. இனி பிரச்சினை வராதுன்னு சொந்த ஊருக்கு திரும்பியவரை தூக்கிய போலீஸ்..மருத்துவர் மரண வழக்கில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்..!

CRICKET, KAPIL DEV, SANJU SAMSON, KAPIL DEV TALKING ABOUT SANJU SAMSON BATTING, INTERNATIONAL MATCHES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்