தினேஷ் கார்த்திக் - ரிசப் பண்ட் இருவரில் உலககோப்பையில் யாருக்கு இடம்? அலசிய WC வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 கிரிக்கெட்டில் தனது நிலைத்தன்மையின் அடிப்படையில் இந்திய அணியில் போட்டியாளர்களை விட தற்போது தினேஷ் கார்த்திக் முன்னிலையில் இருப்பதாக உலக கோப்பை வென்ற இந்திய கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | இந்திய அணியில் இடமில்லை.. நொந்து போன இளம் வீரர் போட்ட ட்வீட்! ஆதரவுக்கரம் நீட்டிய ரசிகர்கள்

37 வயதான DK, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்காக 16 இன்னிங்ஸ்களில் 330 ரன்களை எடுத்தார், சராசரியாக 55 மற்றும் 183.33 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக 66 நாட் அவுட் என்பது இந்த தொடரில் DK-ன் சிறந்த ஆட்டமாகும். அந்த ஆட்டத்தில், ஒரு ஓவரில் 28 ரன்களுக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை வெளுத்து வாங்கினார், தினேஷ் கார்த்திக்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா T20I தொடரில், இதுவரை மூன்று ஆட்டங்களில், கார்த்திக் 37 ரன்கள் குவித்து இரண்டு முறை ஆட்டமிழக்காமல் உள்ளார் (சராசரி-37). DK, இரண்டாவது T20I இல் 21 பந்துகளில் 30 ரன்களை விளாசினார்.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் முதல் தேர்வு விக்கெட் கீப்பராக மாற ரிஷப் பந்த் மற்றும் இஷான் கிஷானுடன் தினேஷ் கார்த்திக் போட்டியிடுகிறார்.

தென்னாப்பிரிக்கா தொடரில் இந்திய அணியை ஸ்டாண்ட்-இன் கேப்டனாக வழிநடத்தி வரும் ரிசப் பந்த், இதுவரை மூன்று ஆட்டங்களில் 13.33 என்ற மோசமான சராசரியில் மூன்று இன்னிங்ஸ்களில் 40 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

கார்த்திக் பார்முக்கு திரும்பியதை பாராட்டிய கபில்தேவ், தமிழக வீரரின் அனுபவம் இந்திய அணிக்கு முக்கியமாக இருக்கும் என்றார். மேலும், “நிலைத்தன்மையைப் பற்றி பேசினால், தற்போது தினேஷ் கார்த்திக் அனைவரையும் விட முன்னிலையில் உள்ளார். இஷான் கிஷான் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார் என்று நான் நினைக்கிறேன். ஐபிஎல் ஏலத்தில் அவர் பெற்ற அதிக விலையின் அழுத்தமாக இருக்கலாம்” என்று கபில்தேவ் கூறினார். மேலும், “டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் ரிஷப் பந்தை மிஞ்சினார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இந்த முறை DK ஐபிஎல்லில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.  என்று கபில் தேவ் கூறினார்.

Also Read | ரஞ்சிக்கோப்பையில் அடுத்தடுத்து இரண்டு சதம்.. அசத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்.. வயசானா என்ன?

CRICKET, KAPIL DEV, DINESH KARTHIK, WORLD CUP T20, KAPIL DEV TALKING ABOUT DINESH KARTHIK WORLD CUP T20

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்