'இதுல கோலிக்கு மட்டும் இல்ல'... 'எல்லோருக்குமே உரிமை இருக்கு'... கபில் தேவ் அதிரடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபயிற்சியாளர் தேர்வில் கேப்டன் விராட் கோலியின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கபில் தேவ் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் உள்பட, இதர பயிற்சியாளர் பதவியும் உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக, அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க ஜூலை மாதம் 30-ம் தேதி வரை பிசிசிஐ காலக்கெடு அளித்தது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய, கபில்தேவ் தலைமையிலான, அன்ஷுமன் கெயிக்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனைக் குழு புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க உள்ளது.
இதற்கிடையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்ந்தால் மகிழ்ச்சி என்று கேப்டன் விராட் கோலி விருப்பம் தெரிவித்திருந்தார். இது குறித்து தேர்வுக் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான கெய்க்வாட் கூறும்போது, ‘விராட் கோலியின் கருத்தை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் தான் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கபில் தேவ் கூறும்போது, ‘பயிற்சியாளர் தேர்வில் கேப்டன் விராட் கோலி உட்பட, அணியில் உள்ள ஒவ்வொருவரின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும். பயிற்சியாளரை தேர்வு செய்வது ஒன்றும் கடினமான பணியில்லை. எங்கள் திறமைக்கு ஏற்ப செயல்படுவோம்’ என்றார். கமிட்டி உறுப்பினர்களில் மற்றொருவரான சாந்தா ரங்கசாமி, ‘பயிற்சியாளர் தேர்வு குறித்து கருத்து சொல்ல கேப்டன் விராட் கோலிக்கு உரிமை இருக்கிறது. பயிற்சியாளரை நாங்கள் 3 பேரும் கூட்டாக விவாதித்து முடிவு செய்வோம்’ என்று கூறினார்.
மற்ற செய்திகள்
'இங்க ஜீன்ஸ், டி-சர்ட் போட கூடாது'... 'தலை முடியை விரித்து விட கூடாது'... சென்னை கல்லூரியில் அதிரடி!
தொடர்புடைய செய்திகள்
- 'அவருக்குத் தெரியும் சாரே.. அந்த சிரிப்பையும், சந்தோஷத்தையும்'.. மைதானத்தை நெகிழ வைத்த .. வீடியோ!
- ‘கோலியின் வேறலெவல் என்ட்ரீ’.. ‘அதிர்ந்த அரங்கம்’.. வைரலாகும் வீடியோ..!
- 'NOT ONLY FOR MY TEAM.. நாட்டுக்காகவும்தான்'.. சர்ச்சைகளுக்கு FULL STOP வைத்த வீரர்!
- ‘அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவி’.. களமிறங்கும் 2007 -ல் டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் முக்கிய நபர்..!
- ‘நான் அப்படி கேட்டேனா..?’ அவர்கிட்ட நான் பேசக்கூட இல்ல.. ‘பிரபல வீரர் அதிர்ச்சி..’
- அவங்க ரெண்டு பேர்ல.. ‘எனக்கு இவரதான் பிடிக்கும்..’ ரசிகர்களின் கேள்விக்கு.. ‘ட்விட்டரில் பதிலளித்துள்ள பிரபல வீரர்..’
- சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் திடீர் ஓய்வு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- 'புதிய பயிற்சியாளர் விசயத்தில்'... 'அவரலாம் கேட்கணும்னு கட்டாயமில்ல'... தேர்வுக் குழு அதிரடி!
- ‘ஏன் அவரே கேப்டனா இருக்கக் கூடாது?’... 'பதிலடி கொடுத்த முன்னாள் வீரர்'!
- ‘அவர் மீண்டும் வலிமையுடன் ஃபார்முக்கு வருவார்..’ பிரபல வீரர் குறித்து விராட் கோலி நம்பிக்கை..