‘இப்டி டீமை மாத்திட்டே இருந்தா’... ‘அப்புறம் எப்படி இருக்கும்’... ‘ஏன் அந்த வீரரை எடுக்கல’... ‘வறுத்தெடுத்த முன்னாள் கேப்டன்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்தில் இந்திய அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நியூசிலாந்தில் இந்திய அணி ஒருநாள் தொடரை ஒயிட் வாஷ் முறையில் இழந்த நிலையில், 2 போட்கள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டியில் 4 நாட்களிலேயே மோசமாக தோல்வியை சந்தித்து சுருண்டது. இதையடுத்து, இந்த படு தோல்விக்கு சென்ஸ் இல்லாத செலக்சன் முறையே காரணம் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது, ‘ நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்த போட்டி குறித்து ஆராய்ந்து பார்த்தோம் என்றால், இந்திய அணியில் ஏன் இத்தனை மாற்றம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் ஏறக்குறைய புதிய அணி விளையாடுவது போன்றே இருக்கிறது. நிரந்தரமாக அணியில் யாரும் இல்லை. அணியில் அவர்களுக்கான இடத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றால், அது வீரர்களின் ஆட்டத்திறனை பாதிக்கும்.
பேட்டிங் ஆர்டரில் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி, ராஹானே, புஜாரா போன்ற வீரர்கள் இருந்தும், இரண்டு இன்னிங்சிலும் 200 ரன்களுக்கு மேல் கூட அடிக்கமுடியவில்லை என்றால், அவர்களால் அங்குள்ள சூழ்நிலையை எதிர்த்து வெல்ல முடியவில்லை என்பதை காட்டுகிறது. இந்திய வீரர்கள் ஆட்டத்திற்கான திட்டம் மற்றும் யுக்தி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நாங்கள் விளையாடிய காலத்திலும், தற்போது நிகழ்ந்து வருவதற்கும் இடையில் ஏராளமான வேறுபாடு உள்ளது. இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அணியை கட்டமைக்கும்போது, வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். நீங்கள் ஏராளமான மாற்றங்களை உருவாக்கினால், அதில் எந்த அர்த்தமும் இல்லை.
கே.எல். ராகுல் தற்போது சிறந்த பார்மில் உள்ளார். ஆனால் அவருக்கு டெஸ்ட் அணியில் இடமில்லை. இதில் எந்த அர்த்தமும் இல்லை. சிறந்த பார்மில் இருக்கும்போது, அவர் விளையாடுவது அவசியம் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
செம ஷாக்! 'இந்தியாவா' அப்டினா என்ன?... அது எங்க இருக்கு?... போட்டிபோட்டு 'தேடுனது' யாருன்னு பாருங்க!
'அவர்' மட்டும் இல்லன்னா... மானம் 'கப்பலேறி' இருக்கும்... 'சின்னப்பையனை' புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!
தொடர்புடைய செய்திகள்
- இனி 'நீங்க' ஆடலாம்... 'பச்சைக்கொடி' காட்டிய பிசிசிஐ... அடித்து நொறுக்க 'காத்திருக்கும்' முன்னணி வீரர்!
- ‘அண்ணாத்த புடிச்சுக்கோ!’.. ‘மேட்ச்சில் நடந்த மேஜிக்கல் கேட்ச்’.. வைரல் ஆகும் வீடியோ!
- 'இந்த தோல்வினால 'உலகமே முடிஞ்சிருச்சுனு' அர்த்தம் இல்ல!'... 'உச்சகட்ட ஆதங்கத்தில்'... கொட்டித் தீர்த்த 'கோலி!'
- 'உங்க சபலத்துக்காக குடும்பத்தையே சிதைச்சிட்டீங்க'... 'டாக்டர் மனைவி கொலை'... அதிரவைக்கும் திருப்பம்!
- ‘81 பந்துகளுக்கு 11 ரன்கள் தானா?’... ‘இது ரொம்ப ஓவர் பாஸ்’... ‘பொறுமைய சோதிக்காதீங்க’... ‘இந்திய வீரரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்’!
- Video: அவருக்கு போய்... இப்டி ஒரு 'கெட்ட' பேரை வாங்கிக் குடுத்துட்டீங்களே?... 'சின்னப்பையனை' விளாசும் ரசிகர்கள்!
- Video: 'கெட்ட வார்த்தை' பேசுறத எப்போ தான் விடுவாரோ?... கேப்டனுக்கு 'எதிராக' பொங்கும் ரசிகர்கள்!
- இது கண்டிப்பா ‘அவரோடது’ தான்... ‘ஃபீல்டிங்க’ பாத்தாலே தெரியல... ‘வைரலாக’ பரவும் வீடியோ...
- Video: ஆடாம, அசையாம 'அப்டியே' நில்லுங்க... 'இந்தா' வந்துறேன்... திடீரென 'தலைதெறிக்க' ஓடிய கேப்டன்... திகைத்துப்போன ரசிகர்கள்!
- Video: 'மைக்ரோ' நொடியில் ஸ்டெம்பைத் 'தகர்த்த' பந்து... உண்மையிலேயே அவுட்டா?... 'திகைத்து' நின்ற இளம்வீரர்!