“கோலி, ரோஹித் & கே எல் ராகுல் கிட்ட இருக்குற பிரச்சன இதுதான்”… முன்னாள் கேப்டன் கபில்தேவ் சொன்ன விஷயம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் குறித்த தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | நாய் குரைத்த சத்தத்தால் ஏற்பட்ட பிரச்சனை.. டாட்டூ கலைஞருக்கு நேர்ந்த சோகம்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!

கோலி & ரோஹித் ஃபார்ம்…

ஐபிஎல் களேபரம் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி அடுத்தடுத்து சர்வதேசப் போட்டிகளில் விளையாட உள்ளது. நாளை மறுநாள் தென் ஆப்பிரிக்க அணியுடனான டி 20 தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கு கே எல் ராகுல் தலைமை தாங்குகிறார். மூத்த வீரர்களான கோலி மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவர்களின் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விமர்சனம்…

இந்த ஆண்டு இறுதியில் டி 20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகிய மூன்று தொடக்க வீரர்களின் சிறப்பான பேட்டிங் இந்திய அணிக்கு தேவையாக உள்ளது. ஆனால் சமீபகாலமாக ரோஹித் ஷர்மா மற்றும் கோலியின் தடுமாற்றம் குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

கபில்தேவ் விமர்சனம்…

சமீபத்தில் இது சம்மந்தமாகப் பேசிய அவர் "இவர்கள் (விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல்)மூவரும் பெற்றிருக்கும் நற்பெயர் மிகப் பெரியது, ஒருவேளை அதனால் அழுத்தம் அதிகமாக இருக்கலாம், ஆனால் அது அப்படி இருக்கக்கூடாது. நீங்கள் பயமில்லாத கிரிக்கெட்டை விளையாட வேண்டும். இந்த வீரர்கள் 150-160 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முடியும். அவர்கள் அவ்வளவு பெரிய வீரர்கள், ஆனால் ரன்களை வேகமாக சேர்க்கும் நேரம் வரும்போது, அவர்கள் அவுட் ஆகி விடுகிறார்கள்.  டி 20 போட்டிகளைப் பொறுத்த வரை, முதல் 8-12 பந்துகளில் உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் 25 பந்துகள் விளையாடிய பிறகு நீங்கள் அவுட் ஆகிவிடுகிறீர்கள். ஸ்கோர்களை சேர்க்கும்  நேரம் வரும்போது அவர்கள்  அவுட்டாகி வெளியேறுகிறார்கள்.  எனவே அழுத்தம் அவர்கள் மீது உருவாக்கத் தொடங்குகிறது.” எனக் கூறியுள்ளார்.

Also Read | அடிக்கடி அம்மா வீட்டுக்கு போன ‘காதல்’ மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செஞ்ச காரியம்.. அடுத்தடுத்து வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!

CRICKET, KAPIL DEV, VIRAT KOHLI, RAHUL, ROHITH, கோலி, ரோஹித், கே எல் ராகுல், கபில்தேவ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்