கபில் தேவ் பகிர்ந்த சீக்ரெட்.. 1983 'WC' ஜெயிச்ச ராத்திரி எதுவும் சாப்பிடாம படுத்தோம்.. பின்னால் இருக்கும் 'சுவாரஸ்யம்'..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி, கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்திருந்ததை மையமாக வைத்து, '83' என்ற திரைப்படம் இன்று வெளியாகி, மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

முன்னதாக, 1975 ஆம் ஆண்டு, முதல் உலக கோப்பை போட்டி நடைபெற்றிருந்தது. இதிலும், அதன் பிறகு 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைத் தொடரிலும், அந்த சமயத்தில் பலமாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியே கோப்பையைக் கைப்பற்றியிருந்தது. இதனைத் தொடர்ந்து, 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் களம் கண்டன. எப்படியும், பலம் வாய்ந்த அணியாக விளங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி தான் ஹாட்ரிக் கோப்பையைக் கைப்பற்றும் என கருதினர். ஆட்டத்தின் போதும், அப்படி  தான் அனைவரும் எண்ணினர்.

ஆனால், போக போக இந்திய அணியின் கை ஓங்க தொடங்கியது. வரலாறு படைக்கும் வகையில், இந்திய அணி உலக கோப்பையை முதல் முறையாக வென்றும் அசத்தியது. இந்திய அணியின் வெற்றிக்கு, அந்த அணியின் கேப்டனாக இருந்த கபில் தேவ், முக்கிய பங்காற்றியிருந்தார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இருந்து அழிக்கப்படாத இந்த பொன்னான தருணத்தினை தற்போது திரைப்படமாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, இந்த படத்தின் ரீலீஸிற்கு முன்பே, இதற்கான ஸ்பெஷல் திரையிடல் போடப்பட்டிருந்தது. அப்போது, கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, 1983 ஆம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற பிறகு, என்ன செய்தார்கள் என்பது பற்றி, சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுபற்றி, கபில்தேவ் அளித்திருந்த பேட்டியில், 'அன்றிரவு நாங்கள் அனைவரும் வெறும் வயிற்றுடன் தான் உறங்கினோம். உலக கோப்பையை வென்றதால், அன்று முழுவதும், பார்ட்டி, கொண்டாட்டம் என அனைவரும் மிக உற்சாகமாக இருந்தோம்.

இவை அனைத்தையும் முடித்த பிறகு, சரி இரவு உணவு உண்ணலாம் என முடிவு செய்த போது தான், இரவு தாமதமான காரணத்தினால், அனைத்து உணவகங்களும் மூடி விட்டது என்பதை உணர்ந்து கொண்டோம். இதனால், நாங்கள் அனைவரும் வேறு வழியில்லாமல், வெறும் வயிறுடன் சென்று படுத்தோம். இருந்த போதும், யாரும் உணவைப் பற்றிக் கவலைப்படவில்லை. உலக கோப்பையை வென்ற தருணத்துடன், நாட்டுக்காக வரலாறு படைத்ததே எங்களது வயிறை நிரப்பி விட்டது' என தெரிவித்துள்ளார்.

இன்று வெளியாகியிருக்கும் 83 திரைப்படத்தில், கபில் தேவ் கதாபாத்திரத்தில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். பல நாட்கள் தீவிர பயிற்சிக்கு பிறகு, கபில் தேவைப் போலவே பந்து வீசி, அப்படியே நடித்த ரன்வீர் சிங்கிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

CRICKET, KAPIL DEV, 83, கபில் தேவ், ரன்வீர் சிங்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்