‘முன்னாள் கேப்டனுக்கு அடித்த அதிர்ஷ்டம்’... 'புதிதாக துவங்கப்படும்’... ‘விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின்’... 'முதல் வேந்தராக நியமனம்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅரியானா மாநிலத்தில் தொடங்கப்பட உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே விளையாட்டுக்கு என தனி பல்கலைக்கழகங்கள் இதுவரை உள்ளன. இதற்கிடையில், இளைஞர்களிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக, விளையாட்டுத் துறைக்கென தனி பல்கலைக்கழகம் நிறுவுவதற்கு அரியானா மாநில அரசு, ஆலோசித்து வந்தது. இதையடுத்து, அரியானா மாநில சட்டப்பேரவைத் தொடரில், விளையாட்டுக்கென தனிப் பல்கலைக்கழகம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம், அம்மாநில அரசு தனிப் பல்கலைக்கழகம் அமைக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து, அரியானாவின் சோனேபட் மாவட்டத்தில் ராய் நகரில், தொடங்கப்பட உள்ள மாநில விளையாட்டு பல்கலைகழகத்தின் முதல் வேந்தராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாக கபில் தேவ் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் வேந்தராக கபில் தேவ் நியமிக்கப்பட்டதை, அரியானா மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அனில் விஜ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
‘அடுத்த 2 நாட்களுக்கு’.. ‘14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..
தொடர்புடைய செய்திகள்
- ‘இந்தாங்க உங்க குழந்தை’.. ஒரு மணி நேரம் கழித்து ‘நர்ஸ் காட்டியதைப் பார்த்து’.. ‘அதிர்ந்துபோன பெற்றோர்’..
- ‘ஹெல்மெட் போடலனு நிறுத்தினாங்க’.. ‘என் வண்டிகூட அவ்ளோ விலை இல்லை’.. ‘அபராத ரசீதைப் பார்த்து அதிர்ந்துபோய் நின்ற இளைஞர்’..
- சுங்கச் சாவடியில் ‘பெண் ஊழியரிடம்’.. ‘இளைஞர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. வைரலாகும் வீடியோ..
- ‘ஓடும் ரயிலில் திடீரென பற்றிய தீ’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ காட்சி..!
- 'ஸ்கூல் பையன்'.. 'அதுவும் வேற ஜாதி'.. அவனோட கள்ள உறவா?'.. 'செருப்பு மாலை' அணிவித்த 'பஞ்சாயத்து'!
- இந்திய அணி தலைமை பயிற்சியாளர்’... ‘இந்த 6 பேரில் ஒருத்தர்தான்’... ‘வெளியான புதிய தகவல்’!
- ‘திடீரென கேட்ட சத்தம்’... ‘ஐபிஎஸ் அதிகாரி எடுத்த விபரீத முடிவு’... 'அதிர்ச்சியில் அதிகாரிகள்'!
- 'இதுல கோலிக்கு மட்டும் இல்ல'... 'எல்லோருக்குமே உரிமை இருக்கு'... கபில் தேவ் அதிரடி!
- ‘பிறந்த குழந்தைக்கு நடந்த பயங்கரம்..’ காட்டிக் கொடுத்த சிசிடிவி பதிவு..
- 'இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்’... 'இவர் தலைமையிலான குழு தேர்வு?'...