'வயசு ஆயிடுச்சுல்ல'.. 'கண்ணு' சரியா இருக்கான்னு 'செக்' பண்ணிக்கோங்க' .... 'கோலி'க்கு அறிவுரை சொல்லிய 'கபில் தேவ்'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடாத விராட் கோலி தனது கண் பார்வையை பரிசோதித்து பார்க்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி எட்டு வருடங்களுக்கு பிறகு ஒயிட் வாஷ் செய்யப்பட்டது. இந்திய அணியின் ரன் மிஷின் என வர்ணிக்கப்படும் கேப்டன் விராட் கோலி தான் ஆடிய நான்கு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் பார்மில் இல்லாமல் போனது தான் அணியின் தோல்விக்கு காரணம் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கோலியின் பேட்டிங் குறித்து கூறுகையில், இன்ஸ்விங் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பும் கோலி, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதே போன்ற பந்துகளுக்கு அவுட் ஆனார் என்றும், மேலும் முப்பது வயதை தாண்டும் போது ஏற்படும் கண் பார்வை திறன் பிரச்சனை அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் என கூறியவர், இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தன்னை காத்துக் கொள்ள அதிகம் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

VIRAT KOHLI, KAPIL DEV, IND VS NZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்