"முக்கியமான நேரத்துல இப்படியா முடிவு எடுக்குறது?.." போட்டியை புரட்டி போட்ட நடுவர்??.. ஐபிஎல் போட்டியில் நிகழ்ந்த சர்ச்சை

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடரில் இதுவரை ஐந்து லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இன்றைய தினத்தில் நடைபெறவுள்ள போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

Advertising
>
Advertising

IPL-ல இருந்து இனி திடீர்னு விலகுனா ஆப்பு தான்.. புது விதிகளை ரெடி பண்ணும் BCCI..!

முன்னதாக, நேற்று நடைபெற்ற ஐந்தாவது லீக் போட்டியில், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டிருந்தது.

தடுமாறிய ஹைதராபாத் அணி

20 ஓவர்கள் முடிவில், ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி. அதிகபட்சமாக, சஞ்சு சாம்சன் 55 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் குறிப்பாக, ஒற்றை இலக்க ரன்களில் அதிகம் பேர் அவுட்டாகினர்.

மார்க்ரம் 57 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 40 ரன்களும் எடுத்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே ஹைதராபாத் அணி எடுத்தது. இதனால், 61 ரன்கள் வித்தியாசத்தில், ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதனிடையே, ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சனின் விக்கெட், கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மூன்றாம் நடுவரின் முடிவு

இலக்கை நோக்கி ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். அப்போது பிரசித் கிருஷ்ணா வீசிய 2-வது ஓவரில், 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த வில்லியம்சன் ஆட்டமிழந்தார்.

பிரசித் கிருஷ்ணா வீசிய பந்து, வில்லியம்சன் பேட்டில் பட்டு, கீப்பர் சாம்சன் கைக்குச் சென்றது. அவரது கிளவ்ஸில் பட்டு பந்து விலகிச் செல்லவே, மறுகணம் ஸ்லிப்பில் நின்ற தேவ்தத் படிக்கல் அந்த பந்தைக் கேட்ச் பிடித்தார். நேராக படிக்கல் கைக்கு சென்றதா என்பது சரிவர தெரியாத காரணத்தினால், மூன்றாம் நடுவருக்கு முடிவு மாற்றம் செய்யப்பட்டது.

முடிவால் எழுந்த சர்ச்சை

இதனை சில ஆங்கிளில் பார்த்த மூன்றாம் நடுவர், அவுட் என அறிவித்தார். ஆனால், பந்து படிக்கல் கைக்கு செல்வதற்கு முன், கீழே குத்தியது போல தெரிகிறது. இது தொடர்பான வீடியோக்களை அதிகம் பகிர்ந்து வரும் ரசிகர்கள், நடுவர் தவறான முடிவை அளித்து விட்டார் என குறிப்பிட்டு வருகின்றனர். மேலும், ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் உள்ளிட்ட சிலரும், மூன்றாம் நடுவரின் முடிவு பற்றி விமர்சனம் செய்திருந்தனர்.

ஒருவேளை, வில்லியம்சன் களத்தில் நின்று இருந்தால், போட்டியின் முடிவு கூட மாறியிருக்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். ஐபிஎல் தொடரில் மூன்றாம் நடுவரின் முடிவு, தற்போது அதிகம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

“எங்க டீம் ரொம்ப வலிமையா இருக்கு”.. “இந்த தடவை நிச்சயம் ஐபிஎல் கப் எங்களுக்குதான்”.. சுழற்பந்து வீச்சாளர் ஓபன் டாக்..!

CRICKET, IPL, KANE WILLIAMSON, WICKET, IPL 2022, SUNRISERS HYDERABAD, RAJASTHAN ROYALS, SANJU SAMSON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்