வில்லியம்சனை தட்டி தூக்கிய IPL அணி.. CSK-க்கு வருவார்னு எதிர்பார்த்தால் இந்த டீம் எடுத்துட்டாங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி  ஏலம், இன்று (22.12.2022) கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | சபரிமலையில்.. புலி வாகனம் மீது ஐயப்பன் வேடமணிந்து கம்பீரமாக வலம் வந்த சிறுமி

முன்னதாக, ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலையும், விடுவித்த வீரர்கள் பட்டியலையும் முன்னரே வெளியிட்டிருந்தது.

ஐபிஎல் மினி ஏலத்திற்கு சுமார் 20.45 கோடி ரூபாயுடன் சென்னை அணி இறங்கி உள்ளது.

இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடருக்கு முன்பாக ராபின் உத்தப்பா, பிராவோ, கிறிஸ் ஜோர்டன் உள்ளிட்ட எட்டு வீரர்களை அணியில் இருந்து விடுவித்திருந்தது.

மறுபக்கம் ருத்துராஜ், ஜடேஜா, மொயீன் அலி உள்ளிட்ட ஏராளமான வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.  தோனி தலைமையிலான  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் ஏலத்தில் எந்த மாதிரியான வீரர்களை தேர்வு செய்யும் என்பதை அறியவும் அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். அதே போல, சிஎஸ்கே எந்தெந்த வீரர்கள் எடுக்க வேண்டும் என்பது குறித்து தங்களின் விருப்பமான வீரர்களின் பெயர்களையும் அவர்கள் பட்டியலிட்டனர். இதில் வில்லியம்சன் பெயர் முதலில் இருந்தது.

இந்நிலையில் ஏலம் ஆரம்பித்த உடன் முதல் பெயராக வில்லியம்சன் பெயர் ஏலத்தில் வந்தது. ஆரம்ப விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. விலலியம்சனை ஆரம்ப விலைக்கே குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. வேறு எந்த அணிகளும் வில்லியம்சனை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் 2 கோடி ரூபாய்க்கு வில்லியம்சன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆட உள்ளார்.

Also Read | VIDEO : "விவாகரத்துக்கு அப்புறம் கல்யாணம் பண்ணேன் & மகனா என் அம்மாவுக்கு நான்"... குடும்பம் குறித்து சவுக்கு சங்கர் உருக்கம்.! Exclusive

CRICKET, KANE WILLIAMSON, GUJARAT TITANS, IPL AUCTION 2023

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்